பெருமிதத்திற்குரிய எல்லைப்படை வீரர்

0 0
Read Time:3 Minute, 1 Second

முகாவில் பகுதியில் கடமையை முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஒருவரைச் சந்தித்தோம்.வயதைப் பொறுத்தவரை அவருக்கும் களமுனைக்கும் சம்மந்தம் இல்லைப் போலிக்கிறது.ஆனால் ஹோல்ஸர்,ரைபிள் என்பவற்றுடன் காணப்பட்டார்.இவருடனான சந்திப்பில் எமது கணிப்பு தவறானது என உணர்ந்தோம்.இவருடனான உரையாடல் பின்வருமாறு:


ஐயாவின் பெயர் என்ன?
சரணவணமுத்து
வயசு எத்தனை?
47..
ஆக 47 தான ஐயா?
ஓம் 47 தான்
….போனமுறை காயப்பட்ட போது கூடுதலா ரத்தம் போய்விட்டது அதுதான் வயதை கூட்டிக்காட்டுகின்றது.
எங்கே காயப்பட்டீர்கள்?
ஓயாத அலைகள் 03 ல் தான்.கொக்குளாய்ப்பக்கம் நடந்த சண்டையில் சொண்டில் காயம் அதுதான் நல்லா ரத்தம் போய்விட்டது அடியோடதான் பல்லும் சேதமாகிவிட்டது.
எந்த இடம் நீங்கள்?
முத்தையன்கட்டு
ஏனையா உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா? அவர்களை எல்லைக்கு அனுப்பியிருக்கலாம் தானே?
இருக்கினம்.இரண்டு பெடியள் இரண்டு பேரும் இம்ரான் பாண்டியன் படையில் இருக்கின்றார்கள் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.நான் அடிக்கடி எல்லைக்கு வாறதால சாப்பாட்டுப் பிரச்சனை அங்கு அவர்கள் தோட்டத்தைக் கவனிக்கின்றனர்.
எத்தனை முறை எல்லைக்கு சென்றீர்கள்?
யாழ்ப்பாணத்திற்கு இதனுடன் மூன்று தரம் மணலாற்றில் ஒரு ஆறுதரம் போயிருப்பேன்.
அப்ப உங்கள் குடும்பம் வருமானத்திற்கு என்ன மாதிரி?
ஓயாத அலைக்கு பின் நான் இன்னும் வயல் விதைக்கவில்லை முதல் வெட்டி வைத்ததுதான் .
சரி களத்தில் உங்கள் பிள்ளைகளை கண்டனியளோ?
ஓம் கண்டனான்.
இப்ப புதுவருசம் கொண்டாடவோ வீட்டுக்குப் போறீங்கள்?
என்னெண்டு கொண்டாடுவது? இரண்டு பிள்ளைகள் சண்டையில் நிக்கும்போது வீட்டில் கொண்டாட எப்படி மனம் வரும்?மனுசி ஒத்துக்கொள்ளாது.
எனக்கு அவரது காலைத் தொட்டுக் குப்பிட வேண்டும் போலிருந்தது
இவருடன் கூட வந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் இளம் குடும்பஸ்தர்கள் இவர்களுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டு களமுனையில் நிற்கும் இவரது பண்பைப் பாராட்டாமல் நிற்கமுடியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment