கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளத்தை அழிக்க விசமிகளால் தீவைப்பு

28.03.2021 கிட்டு பூங்கா நுழைவாயிலுக்கு தீ வைப்பு நல்லூர் கிட்டுப் பூங்காவின் நுழைவாயில் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது

மேலும்

ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்க்கு எதிராக யேர்மனியில் இன்று பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.

ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்க்கு கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைத்திருப்பதற்கு எதிராக யேர்மனியில் பல்வேறு அமைப்புகள் இன்று ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

மேலும்

ஆஸ்திரேலியா நாட்டில் தமிழர் போராட்டங்களை முன்னெடுக்கும் 16 வயது தமிழ் சிறுமி.

ஆஸ்திரேலியாவில் பதினொரு வருடங்களாக தமிழர் ஒருவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும் தமிழீழம் விடுதலை அடைய வேண்டும் எனவும் தமிழர்களுக்கு நீதி வேண்டும் எனக் கோரி ஆஸ்திரேலியாவின் பல பாகங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறார் Renuga Inpakumar றேணுகா இன்பகுமார் என்ற ஆஸ்திரேலியாவில் பிறந்த 16 வயது தமிழ் சிறுமி.

மேலும்

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது . இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது .

மேலும்

தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!!

27.03.2021 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!! கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான 46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.

மேலும்

தமது நாட்டில் வதிகின்ற சில தமிழ் அகதிகளை அவசர அவசரமாக நாடுகடத்தத் தயாராகின்றது ஜேர்மனி

கடந்த சில நாட்களாக ஜேர்மனியில் வசித்து வருகின்ற ஈழத்தமிழர்களில் சிலரை விடியற்காலையில் மேற்கொள்ளப்படும் திடீர்ச் செயற்பாட்டில் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுவருகிறார்கள். கைது செய்யப்படுபவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது தொடர்பாக அவர்களது உறவினர்கள் எந்தவிதமான தகவலையும் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மேலும்

ஐ.நா மனித உரிமை சபையில் 46வது கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தமிழாக்கம்.

ஐ.நா மனித உரிமை சபையில் 46வது கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தமிழாக்கம்.

மேலும்

யேர்மனியில் 80 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்

ஏறக்குறைய இதுவரை 80 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். பல இடங்களில் “நிரந்தர வதிவிடஉரிமை” தருவதாகப் பொய்சொல்லி அழைக்கப்பட்டே பலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

மேலும்

தமிழர்க்கெதிரான இறுதிப்போரில் தமிழகத் தலைவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்ததாக சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் கூறுகிறார்?

சிவ்ஷங்கர் மேனன் – ஈழத்தமிழர்களால் மறக்கமுடியாத, அவர்களின் சரித்திரத்தில் பதிந்துவிட்ட பெயர். லட்சக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளுக்கும், தமிழரின் தாயகத்தில் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், அவர்களின் தாயக சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடக் காரணமான இரு மலையாளிகளில் ஒருவரது பெயர்.

மேலும்