சுண்டிக்குள கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும்.

0 0
Read Time:5 Minute, 5 Second

யாழ்குடாநாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்த இராணுவம் மிகுதி உள்ள பகுதியை ஆக்கிரமிக்க முற்பட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்க்கு கடல்வழிமூலம் சென்று வந்து கொண்டிருந்த கடற்படையினர் மீது ஒரு தாக்குதல் நடாத்தி அக்கடல் விநியோகப் பாதையை தடுக்கும் திட்டம் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டது.

அதற்கமைவாக கடற்படையினரின் விநியோக நடவடிக்கைக்கான வேவுத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டன வேவுத்தரவுகளின்படி ஒரு கப்பலும் அதற்க்குப் பாதுகாப்பாக இரண்டு டோறாப்படகும் உலங்குவானுர்தியும் செல்வதாக இருந்தது.இத் திட்டத்தின்படி கடற்புலிகளின் சண்டைப் படகுகள் கப்பலை வழிமறித்து தாக்கி அழிப்பதென்றும் கப்பலுக்கு பாதுகாப்பாக வரும் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்துவதற்காக இம்ரான் பாண்டியன் படையணிச் சிறப்புத் தளபதியும் தலைவர் அவர்களின் மெய்பாதுகாப்பாளருமான கடாபி அவர்களும் அவரோடு சில விமானஎதிர்ப்புப் பிரிவினரும் கடற்புலிகளின் சண்டைப்படகுகளுடன் செல்ல சண்டை அணிகளுக்கு சிறப்புத் தளபதி சூசை அவர்கள் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்தியதுடன் தாக்குதலின் முக்கியத்துவத்தையும் தலைவர் அவர்களின் எண்ணத்தையும் தெளிவுபடுத்தினார்.அத்தோடு பகல் சண்டை என்பதால் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார் .சண்டை அணிகள் சாளைத் தளத்திலிருந்து சென்று சுண்டிக்குளப் பகுதியில் காத்திருந்தன. 30.03.1996 அன்று காலை சுணடிக்குள ராடர் நிலையத்திலிருந்து ஒரு கப்பலும் இரண்டு டோறாப் படகுகளும் வருவதாக தகவல் கிடைக்க சண்டைப் படகுகள் கடற்படையின் விநியோகக் கப்பலை மறிக்க சண்டைப்படகுகள் முற்பட்டவேளையில் கப்பலுக்கு மறைவாக ராடரில் விழாத வண்ணமும் வந்த டோறாப் படகுகளுடன் சண்டை தொடங்கியது.சண்டை தொடங்கியவுடன் ஒரு சண்டைப்படகு எதிரியின் தாக்குதலில் தீப்பற்றி எரிந்து மூழ்கியது .மேலதிகமாக வந்த டோறாப் படகுகளுடன் பட்டப்பகலில் கடற்படை மற்றும் விமானப்படையினருடன் கடும் கடற்சண்டை தொடர்ந்தது வாழ்வா சாவா என்ற நிலையிலும் தொடர்ந்தது ஒரு கட்டத்தில் ஒரு டோறாப் படகு சண்டைப் படகை இடித்து தாக்கி முழ்கடிக்க வந்தபோதும் ஒரு வீரன் தனது பி.கே ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருந்தான்.அப்படகில் தான் தளபதி கடாபி அவர்களும் இருந்தார்.
இக்கட்டான இந் நிலையை உணர்ந்த தளபதி கடாபி அவர்கள் தான் வைத்திருந்த விமான எதிர்ப்பு ஆயுதத்தால் டோறா மீது தாக்கினார்.இத் தாக்குதலால் நிலைகுலைந்து சுற்றிக் கொண்டிருந்த டோறா மீது கடற்கரும்புலிகளான மேஐர் ஜெகநாதனும் கப்டன் இளையவளுமாக தங்களது கரும்புலிப்படாகால் இடித்து அவ் டோறாவை மூழ்கடித்து வீரகாவியமாகினார்கள்.இச்சமரை தளபதி லெப் கேணல் டேவிற்/ முகுந்தன் கடலில் வழிநடாத்தினார்.
இத்தாக்குதலில் நீண்டகடலனுபவமும் கடற்சமர்களில் அனுபவங்கள் நிறைந்தவர்களும் கனரக ஆயுதத்தில் பல்வேறுபட்ட அனுபவங்களும் கொண்ட, லெப். கேணல் குணேஸ் (எழில்வண்ணன்), லெப். கேணல் நிமல் உட்பட்ட இருபத்திரண்டு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன்
சங்கரப்பிள்ளை தவராசா
கிளிநொச்சி

கடற்கரும்புலி
கப்டன் இளையவள்
(இராசலிங்கம்.இராஜமலர்)
உவர்மலை.திருகோணமலை

அன்று களத்தில் நின்று களமாடி இன்று புலம்பெயர்தேசத்திலிருந்தவர்களின் நினைவுகளிலிருந்து.

எழுத்துருவாக்கம்…சு.குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment