சிங்கத்தின் குகைக்குள் புகுந்த கடற்கரும்புலிகள் அணிகளும் மற்றும் கடற்புலிகள் அணிகளும்.

1 0
Read Time:8 Minute, 24 Second

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமருக்குத் தேவையான இராணுவதளபாடங்கள் மற்றும் ஏனைய பொருட்களை சர்வதேச கடற்பரப்பிலிருந்து ஆழ்கடல் விநியோக நடவடிக்கை மூலம்


சாளைத் தளத்திற்க்கு கொண்டுவந்து கொண்டிருந்தனர்.(அந்த நேரத்தில்ஜெயசிக்குறுவின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது இவ் விநியோக நடவடிக்கையே .)இந்த நடவடிக்கையினை கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்கை அணியும் இவர்களுக்குப் பாதுகாப்பாக கடற்புலிகளின் கடற்தாக்குதல் அணியும் வழங்கிகொண்டிருந்தன.இந் நடவடிக்கை பெரும்பாலும் ஒவ்வொருநாளும் இடம்பெற்றது .இக்காலப்பகுதியில் கடற்புலிகள் கடலில் வலிந்த தாக்குதல்களை நடாத்தவில்லை.ஏனெனில் இவர்களுக்கு ஆழ்கடல் விநியோக அணிகளுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய பாரிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது .இந்தநேரத்தில் விடுதலைப்புலிகளின் வான்காப்புப்படையினர் தமிழீழ வான்பரப்பை ஒரளவு கட்டுப்பாட்டின் கீழும் வைத்திருந்தனர்.இந்தநேரத்தில் சிங்கள அமைச்சர் ஒருவர் வான்வழிப் பயணம் பாதுகாப்பில்லாததால் கடல்வழிமூலம் யாழ்ப்பாணம் சென்று திரும்பி கொழும்பில் வந்து ஒரு செவ்வி கொடுத்திருந்தார்.அதாவது கடல்வழிப் பயணம் பாதுகாப்பானது என்றார். இந்தச் செவ்வியானது கடற்புலிப் போராளிகளை சீண்டியிழுத்ததாகும்.கடற்புலிப்போராளிகள் இத்தகவல்களை சிறப்புத் தளபதி சூசை அவரகளிடம் கூறி தலைவர் அவர்களிடம் ஒரு வலிந்த தாக்குதலுக்கு அனுமதி பெற்றுத்தருமாறு கேட்டனர்.அதற்கமைவாக ஆழ்கடல் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தலைவர் அவர்களால் ஒரு சிறந்த தாக்குதற்திட்டம் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல் சிங்கத்தை சிங்கத்தின் குகைக்குள்தான் சந்திக்கவேண்டுமெனவும் தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்.தலைவர் அவர்களின் திட்டப்படி 21.02.1998 அன்று மாலை லெப் கேணல் நிறோஐன் அவர்களின் தலைமையிலான சண்டைப் படகுத் தொகுதியும் அவர்களோடு கடற்கரும்புலிப்படகுகளும்( இக் கடற்கரும்புலிப்படகுகளை லெப் கேணல் பகலவனும் லெப் கேணல் ெஐரோமினியும் சண்டைப் படகுகளிலிருந்து வழிநடாத்தியிருந்தனர்.) முல்லைத்தீவுக்கு உயர ஐம்பத்தைந்து மைல்களுக்குச்சென்று அங்கு எரிபொருட்களை நிரப்பி படகுகள் மீழ் ஒழுங்குபடுத்தி பருத்தித்துறைக்கு உயர பதினைந்து கடல்மைல் தூரத்தில்
இராணுவத்தளபாடங்களுடன் திருகோணமலையிலிருந்து காங்கசன்துறை நோக்கி வந்து கொண்டிருந்த பபதா தரையிறங்குக் கப்பல் மீது 22.02.1998 அன்று அதிகாலை லெப் கேணல் ஒஸ்கார் தனது கனரக ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருக்க அதே சமயத்தில் கடற்கரும்புலி கப்டன் மொறிஸ் தலைமையிலான படகு கப்பலை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது எதிரியின் தாக்குதலில் மொறிஸ் வீரச்சாவடைய அப்படகிலிருந்த பின் கடற்கரும்புலியாகிய கடற்கரும்புலி மேஐர் மதன் அவ்வளவு தாக்குதல்களுக்கு மத்தியில் காப்பாற்றப்பட்டதோடு அக்கரும்புலிப் படகும் மீட்கப்பட்டது.அதே சமயம் மேஐர் வள்ளுவன் தலைமையிலான கரும்புலிப்படகால் கப்பலின் பின்பக்கம் தாக்க பபதா கப்பல் நின்றது அதே நேரத்தில் கப்பலிலிருந்த படையினர் தங்களது சிறியரக ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருந்தனர் இத்தாக்குதலுக்கு மத்தியில் கடற்கரும்புலி மேஐர் சுலோஐன் தலைமையிலான கடற்கரும்புலிபடகால் கப்பலின் முன்பகுதியில் தாக்க பபதாக்கப்பல் மூழ்கியது. இன்னொரு பக்கமாக லெப் .கேணல் பழநி மற்றும் மேஐர் கருணாகரன் தலைமையிலான
படகுத்தொகுதி வலம்புரிகப்பல் மீது தாக்கி வழியமைத்துக்கொடுக்க கடற்கரும்புலி லெப் கேணல் கரன் தலைமையிலான கடற்கரும்புலிப்படகால் தாக்கி வலம்புரிக் கப்பலை மூழ்கடித்தனர்.தொடர்ந்து கடற்படையின் டோறாப்படகுகளின் பாரிய முற்றுகையை உடைத்தெறிந்து
கடற்புலிகளின் சண்டைப் படகுத்தொகுதிகள் தளம் திரும்பின.இவ்வெற்றிகர கடற்சமரை கடற்புலிகளின் கடற்தாக்குதற் தளபதியும் கடற்புலிகளின் துணைத்தளபதியுமான லெப் கேணல் நிறோஐன் அவர்கள் கடலிலிருந்து செவ்வனவே வழிநடாத்த இவ் அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் நெறிப்படுத்தி சாளைத் தளத்திலிருந்து வழிநடாத்தினார்.

22.02.1998 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் வலம்புரி மற்றும் பபதா கடற்கலங்களை மூழ்கடித்து வீரகாவியமான

கடற்கரும்புலி லெப்.கேணல் கரன்
பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன்
மன்னம்பிட்டி, மட்டக்களப்பு

கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன்
செல்வராசா தவராசா
அராலி மேற்கு, கொட்டைகாடு, யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி மேஜர் குமரேஸ்
துரைராசா செல்வகுமார்
பூந்தோட்டம், வவுனியா

கடற்கரும்புலி மேஜர் தமிழினியன்
நடராசா கிருபாகரன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.

கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா)
குமாரசிங்கம் விஜஜேந்திரன்
தம்பலகாமம், திருகோணமலை

கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்)
துரைராசா சத்தியவாணி
வெட்டுக்காடு, பூநகரி, கிளிநொச்சி

கடற்கரும்புலி கப்டன் மொறிஸ் (தமிழின்பன்)
தர்மபாலசிங்கம் தயாபரன்
காரைநகர், யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி கப்டன் வனிதா
கந்தையா புஸ்பராணி
மாறாஇலுப்பை, நெடுங்கேணி, முல்லைத்தீவு

கடற்கரும்புலி கப்டன் நங்கை
பட்டுராசா கௌசலா
கொட்டடி, யாழ்ப்பாணம்.

கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி
கைலாயநாதன் சுகந்தி
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு

கடற்கரும்புலி கப்டன் மேகலா
தங்கராசா தமயந்தி
வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுவோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment