தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் மாவீரர்களை மதித்தவிதம். ஒரு சிறு பார்வை .

1 0
Read Time:3 Minute, 53 Second

1998ம் ஆண்டு நடுப்பகுதியில் ஐெயசிக்குறு எனும் பெயரில் முப்படையினர் நிலஆக்கிரமிப்பை மேற்கொண்டு வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் முப்படையினரின் கடும் தாக்குதலுக்கு இலக்காகிக்கொண்டிருந்த நேரமும் கடும்பொருளாதாரத் தட்டுப்பாட்டில் மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருந்த நேரமும்கூட இந்த ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிரான மறிப்புத் தாக்குதல்கள் மற்றும் வலிந்த தாக்குதல்களை விடுதலைப்புலிகள் தலைவர் அவர்களின் நேரடி வழிகாட்டலில் நடாத்திக்கொண்டிருந்தார்கள்.

அதேசமயம் இவ்ற்றிற்க்கு வலுச்சேர்க்குமுகமாக விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் ஒருபகுதியினர் அதாவது ஆண் பெண் போராளிகள் கடும் காலநிலைகளுக்கும் மத்தியிலும் ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படியும் இப் படையினருக்கெதிரான தாக்குதலுக்கு தேவையான பொருட்களை சாளைத்தளத்திற்க்கு கப்பலிலிருந்து இறக்கிக்கொண்டருந்தனர். அச் சமயத்தில் முக்கிய பொருட்களடங்கிய இருகப்பல்களும் கடற்புலிகளுக்குத் தேவையான பொருட்களடங்கிய ஒரு கப்பலும் வந்து சர்வதேசக்கடற்பரப்பில் வந்துநின்றது அதேசமயத்தில் சீமெந்துடன் ஒருகப்பலும் வந்து கொண்டிருந்தது .அதேநேரத்தில் சர்வதேச கடற்பரப்பிலிருந்தவர்களுக்கு அனைத்துப் பொருட்களையும் இறக்குவதை நிப்பாட்டிவிட்டு உடனடியாக சீமெந்தை இறக்குமாறு தலைமையிடமிருந்து கட்டளை பறந்தது சர்வதேசகடற்பரப்பிலுள்ளவர்களுக்கும் சாளைத்தளத்திலிருந்தவர்களுக்கும் ஒரேகுழப்பம் என்னடா இப்படியே சீமெந்து இறக்கிக் கொண்டிருந்தால் ஆமி வன்னியை பிடித்துப் போடுவான் என ஒருபகுதியினரும் அதுவரை சந்தோசமாக விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட போராளிகளுக்கு என்னடா இது என்று சலிப்புடன் விநியோக நடவடிக்கையிலும் ஈடுபட்டார்கள்.இவையனைத்தையும் கவனித்த சிறப்புத்தளபதி சூசை அவர்கள் தலைவரிடம் இந்நிலையைத் தெரிவித்தார்.

அதற்க்குத் தலைவர் அவர்கள் நாங்கள் சண்டைபிடிப்பதற்க்கு தேவையான பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தாள் மாவீரர்களின் கல்லறைகளை மண்ணாளா கட்டுவது எங்களுக்கு மாவீரர்களின் கல்லறைகள் தான் முக்கியம் அவர்களின் தேவைமுடிந்ததும் மற்றப்பொருட்களை இறக்கலாம் என உறுதியோடும் தெளிவாகவும் கூறினார் .

அப்போதுதான் சீமெந்தின் முக்கியத்துவத்தையும் சூசை அவர்கள் உணர்ந்ததுடன். அனைத்துப் போராளிகளுக்கும் தெளிவுபடுத்தினார்.அதனைத் தொடர்ந்து அனைத்துப் போராளிகளும் புதியதொரு உற்சாகத்தோடு தத்தமது பணிகளில் செவ்வனே ஈடுபட்டார்கள்.

எழுத்துருவாக்கம்.சு.குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment