போராளிகள் அதிஸ்டத்திலும் சாத்திரத்திலும் நம்பிக்கைவைக்காமல் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதில் தேசியத் தலைவர் அவர்கள் தெளிவாகவும் மிகவும் உறுதியாகவும் இருந்தார் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.

1 0
Read Time:2 Minute, 57 Second

1999ஆண்டு நடுப்பகுதி வன்னிப் பெருநிலப்பரப்பு பாரிய இராணுவமுற்றுகைக்கு அகப்பட்டுக்கொண்டிருந்த காலம் அதற்கெதிராக விடுதலைப்புலிகள் கடுமையாக போரிட்டுக் கொண்டிருந்த காலமும்கூட இப்போரரங்கிற்க்குத் தேவையான பொருட்களை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ஆழ்கடல் விநியோக நடவடிக்கையின் மூலம் சாளைத்தளத்திற்க்கு கொண்டுவந்து கொண்டிருந்தனர்.

இவ்ஆழ்கடல் விநியோகமானது கடற்புறாவாகவிருந்து  கடற்புலிகளாக மாற்றம்பெற்றதிலிருந்து எட்டாம் நம்பர்வரும் திகதிகளில் இடம்பெறுவதில்லை.அதாவது( 8, 17, 26,) இது ஒரு மிகவும் இக்கட்டான காலமென்பதால் தேசியத்தலைவரால் எட்டாம் நம்பரிலும் விநியோத்தைச் செய்யுமாறு சிறப்புத்தளபதி சூசை அவர்களிடம் கூற சூசை அவர்களோ அண்ணை நாங்கள் எட்டாம் நம்பரில் விநியோகம் செய்வதில்லை என்று கூற சரி போராளிகளை கதைக்க ஒழுங்கு பண்ணுமாறு தலைவர் அவர்கள் கூறினார்.அதற்கமைவாக  அந்த நள்ளிரவில் அங்கிருந்த சிலபோராளிகளுக்கு அடித்ததுயோகம்அதே நேரம் என்னடா இந்த நேரம் அண்ணை வந்திருக்குகிறார்.என்ற மனதில்  குழப்பமும் கூட போரளிகளுக்கு ,வாங்கோ இருங்கோ என்று  தலைவர் கூறி தொடர்ந்தார். என்ன உங்கன்ர தளபதி எட்டாம் நம்பரில் விநியோகம் செய்வதில்லை என்று கூறுகிறார் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தலைவர்  அவர்கள் கேட்க தளபதி நிறோயன் அவர்கள் அண்ணை நாங்கள் எட்டாம் நம்பரில் வழமையாக விநியோகம்  செய்வதில்லை  என்று கூறினார்.அப்ப தலைவர் அவர்களோ நானும் எட்டாம் நம்பர் தான் என்னையும் இயக்கத்தை விட்டுக் கலைக்கலாமே என்று தனது நகைச்சுவைப் பண்போடு கூறினார்.அண்ணையின் சொல்லின் முக்கியத்துவத்தையும் அதன் பெறுமதியையும்  உணர்ந்த கடற்புலிகள் தமது விநியோகத்தை எட்டாம் நம்பரில் ஆரம்பித்து ஒரு புதிய தொடக்கத்தை  தொடர்ந்தனர்.அன்றைய நிகழ்விலிருந்து இன்று பல்வேறு திசைகளிலில் உள்ளவர்களின் உணர்விலிருந்து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment