இயக்கக் கட்டுப்பாடுகளும் அதற்க்குக் கீழ்படிந்த தேசியத் தலைவர் அவர்களும்.

0 0
Read Time:4 Minute, 59 Second

பேப்பாரைப்புட்டிக்கும் முல்லைத்தீவுமாவட்டம் புதுமாத்தளனுக்கும் இடைப்பட்ட தொடுவாயுடனான சுமார் பத்துக் கிலோமீற்றர் சுற்றளவான பிரதேசம் தான்   சாளை இப்பகுதி  கடற்புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்பகுதிக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே உட்செல்லவார்கள் . தமிழீழத்திற்கான பலம்சேர்க்கும் நடவடிக்கையும் இங்கேயே இடம்பெற்றது. 


1997ம் ஆண்டு  நடுப்பகுதியில் இரவு பதினொரு மணியளவில் சாளைத் தளத்திற்க்குள் நுழைவதற்காக ஒரு வாகனம் வந்தது அதனை தளத்தின் முன்காவலரனில் அன்றையதினம் கடமையிலிருந்த கடற்கரும்புலி லெப்.கேணல் நீதியப்பன்( வீரச்சாவு 15.08.1999 ) அவர்கள்மறித்து நான் முகாம் பொறுப்பாளரான லெப்.கேணல் டேவிற் (வீரச்சாவு 16.12.1998) அவர்களைக் கேட்டுத்தான் விடுவேன் நீங்கள் உங்களுடைய வாகனத்தை பாதைக்கு அருகில் விடுமாறு கூறினார். ஆனால் அவ் வாகனச்சாரதியோ தனது பெயரைக்கூறி உள்ளேவிடுமாறு  கேட்க எவராகிலும் சரி முகாம் பொறுப்பாளரைக்கேட்டுத்தான் விடுவேனெக் உறுதியோடு  கூறி முகாம்பொறுப்பாளரைக் நடைபேசியில் தொடர்பெடுத்து விடயத்தைக் கூறி அவ்வாகனச் சாரதியின் பெயரையும்  கூறினார்.யார்  வந்திருக்கிறார் என்பதை உணர்ந்த முகாம் பொறுப்பாளர்.உடனடியாக விடுமாறு பணித்தார்.அதுவரையும் வாகனத்திலிருந்த தேசியத்தலைவர் அவர்கள் முகாமிற்குள் சென்றதும் முகாம் பொறுப்பாளரிடம் சொல்லி நீதியப்பனை வரவழைத்துப் பாராட்டினார்.சாளைத்தளத்தைப் பொறுத்தளவில்  மிகவும் கட்டுப்பாடுகள் மிகுந்த தளமாகும்.
சகபோராளிகளின் பாதுகாப்பு விடயத்தில்  மிகுந்த அக்கறை கொண்ட தேசியத்தலைவர் அவர்கள்.


புலிப்பாய்ச்சல் சமர் நடந்துகொண்டிருந்த சமயம் அச்சமரை களமுனையில் வழிநடாத்திக்கொண்டருந்த தளபதிகளுள் ஒருவரான மூத்த தளபதி சொர்ணம் அவர்களை அழைத்து வருமாறு தனது மெய்ப்பாதுகாப்பாளரிடம் கூற அவரோ களமுனைக்குச் சென்று  தளபதி சொர்ணம் அவர்களை அழைத்து வந்தார்.தலைவர் அவர்கள் தளபதி சொர்ணம் அவர்களுடன் கதைத்துவிட்டு அவரைவழியனுப்புவதற்காக வந்த தலைவர்  அவர்கள் தனது மெய்ப்பாதுகாப்பாளர் ஒருவருடன் செல்வதை அவதானித்து உடனடியாக தனது மெய்பாதுகாப்பு அணிகளிள் ஒரு அணியை அனுப்பி அவரை கமுனையில் கூட்டிச்சென்று விடுமாறு பணித்தார்.இப்படியாக ஒவ்வொரு போராளிகளிலும் மிகவும் அக்கறை கொண்டவர் தேசியத்தலைவர் அவர்கள்.


1996ம் ஆண்டு நடுப்பகுதியில் கடற்புலிகளின் பிரதான தளமான சாளைத் தளத்தின் மீது ஒரு பாரிய விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டு போராளிகள் காயமடைந்தார்கள்.அவ்விமானத்தாக்குதலானது தரையிலிருந்து குறிப்பிட்ட உயரத்தில் விமானத்திலிருந்து போடப்பட்ட குண்டுகள் வெடித்ததால்( எயாசொட்)  போராளிகள் பதுங்குகுழிகளில் இருந்தும் காயமடைந்தார்கள்.இதனை தலைவர் அவர்களிடம் தெரிவித்தார். சிறப்புத் தளபதி சூசை  அவர்கள்.உடனடியாக  சாளைத்தளத்திலிருந்த அனைத்துப் போராளிகளுக்கும் புல்லட்புறூவ் ஐக்கற்றும் கெல்மெற்றும் கொடுத்து அனைவரும் காலை குறிப்பிட்ட நேரமும் மாலை குறிப்பிட்டநேரமும் அணியவேண்டும்.மட்டுமன்றி தங்ககங்களைவிட்டு வெளியில் செல்லும்போது தங்களுடன் கொண்டுசெல்லவேண்டும் எனப்பணித்ததுடன்.தங்களுடன் எந்தநேரமும் வைத்திருக்கவேண்டும் எனவும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment