சுவிசில் புதிய முடக்கம் இல்லை

கடந்த 18. 12. 2020 சுவிஸ் அரசு மகுடநுண்ணித் தொற்றிற்கு (Covid-19) எதிரான தமது இறுக்கமான முடக்க நடவடிக்கைகளை அறிவித்திருந்தது. நோய்ப்பெருந்தொற்று சூழலை அவதானித்துவந்த சுவிஸ் அரசின் சுகாதாரத்துறையின் நோய்த் தடுப்புச் செயலாக்கக்குழுவின் மதியுரைக்கு ஏற்ப தாம் புதிய அறிவிப்புவிடுவதைக் கைவிடுவதாக இன்று சுவிற்சர்லாந்து நடுவனரசு ஊடக அறிக்கை ஊடாகத் தெரிவித்துள்ளது.

மேலும்

போராளிகள் அதிஸ்டத்திலும் சாத்திரத்திலும் நம்பிக்கைவைக்காமல் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதில் தேசியத் தலைவர் அவர்கள் தெளிவாகவும் மிகவும் உறுதியாகவும் இருந்தார் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.

1999ஆண்டு நடுப்பகுதி வன்னிப் பெருநிலப்பரப்பு பாரிய இராணுவமுற்றுகைக்கு அகப்பட்டுக்கொண்டிருந்த காலம் அதற்கெதிராக விடுதலைப்புலிகள் கடுமையாக போரிட்டுக் கொண்டிருந்த காலமும்கூட இப்போரரங்கிற்க்குத் தேவையான பொருட்களை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ஆழ்கடல் விநியோக நடவடிக்கையின் மூலம் சாளைத்தளத்திற்க்கு கொண்டுவந்து கொண்டிருந்தனர்.

மேலும்