சுவிசில் இரண்டவாது கொறோனா அலையும் – நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும்

0 0
Read Time:13 Minute, 0 Second

மகுடநுண்ணுயிரித் தொற்றுத் தொடர்பான சுவிற்சர்லாந்து நடுவனரசு மற்றும் மாநில அரசுகளின் கூட்டாகப் பங்கெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பு பேர்ன் மாநிலத்தில் கடந்த 20. 10. 2020 நடைபெற்றிருந்தது.

கொறேனா நோய்த் தொற்றின் நேர்மறை விகிதம் தொடர்பாக தாம் மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டுள்ளதாக சுவிஸ் அரசின் தொற்றுநோய்த் தடுப்பு நடுவகத்தின் தலைமை அதிகாரி திரு. ஸ்ரெப்பான் குஸ்ரெர் இச் சந்திப்பில் அறிவித்தார்.
தற்போது தொற்றின் விகிதம் 1இற்கு 6 என உள்ளது. இதன் பொருள் தொற்றின் தீவரத்தின்படி தொற்றுக்குள்ளான 10 நபர்கள் 16 புதியவர்களுக்கு தொற்றினை வழங்குகின்றார்கள் என்பதாகும்.
தற்போதைய கணக்கின்படி 150 மருத்துவமனைகள் மூச்சுவழங்கிப் பொறிகளுடன் 1000 நோயாளர்களை உள்வாங்கக்கூடிய திறனுடன் தயாராக உள்ளன. அதுபோல் மாற்றுத் தயார்ப்படுத்தல் ஊடாக 1500 முதல் 1800 நோயாளர்களைப் பராமரிக்கும் வலுவை சுவிற்சர்லாந்து கொண்டுள்ளது.
கடந்த நாட்களாக சுவிசின் நடுவனரசும் மாநில அரசுகளும் இணைந்து கொறோனா நிபுணர் குழுவின் மதியுரைப்படி இரண்டாம் அலையை எதிர்கொள்ளத் தேவையான மருத்துவப் பொருட்களின் கையிருப்பினை பெருக்கி இருந்தனர்.  இப்பொருட்களின் iயிருப்பு 3மாதங்களுக்கு மேலாக உள்ளதாக சுவிஸ் அரசு உறுதியளித்துள்ளது.
கடந்த நாட்களில் சுவிஸ் சுகாதர அமைச்சர் திரு. பெர்சே அவர்களிடம் சில ஐரோப்பிய நாடுகளில் இப்போது நடைமுறையில் உள்ளதுபோல் «நோய்ச்சுற்றுப் பிரிப்பான் (Circuit-Breaker)» எனப்படும் சிறு முடக்கம் சுவிசில் ஏற்பட வாய்ப்புள்ளதா? என சுவிஸ் தொலைகாட்சி வினாவியது. அதற்குப் பதில் அளித்த அமைச்சர் எமது தற்போதைய நோய்த் தடுப்பு முறைகள் உரிய முறையில் கடைப்பிடிக்கப்பட்டு, தொற்றுத் தீவிரம் குறையுமானால் நாம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி வராது. மக்களது சமூக மற்றும் பொருளாதார வாழ்வியல் சீர்கெடாது நாம் அக்கறையுடன் முடிவுகளை எடுத்துவருகின்றோம். எதிர்மறையாக நோயின் தீவிரம் அதிகரித்தால் கடுமையான நடவடிக்கை தொடர்பாக மாநில அரசுகளுடன் பேசி முடிவெடுக்க வேண்டி வரும் என்றார்.
சுவிஸ் நடுவன் அரசு அறிவித்திருக்கும் அறிவித்தலைத் தாண்டி சுவிசின் ஒவ்வொரு மாநிலங்களும் அறிவித்திருக்கும் நடவடிக்கைகள்:

அறோ:
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள்: 15 நபர்களுக்குமேலாக, வருகை நிரலில் பதியப்பட வேண்டும்.மதுக்கூடம் மற்றும் விடுதிகள்: ஆகக்கூடிய வருகை அளிப்போர் தொகை: 50பாடசாலைகள்: வயதுவந்தோர் முகவுறை அணிதல் வேண்டும்.

அப்பென்செல் அவுசெர்கோடென்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: நடனமாடத் தடை, சமூகத்தொடர்பு தடம்மறிதல் பதிவுபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

அப்பென்செல் இன்னெர்கோடென்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: நடனமாடத் தடைபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

பாலசல் லாண்ட்:
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: ஆகக்கூடியது 100 விருந்தினர்பாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

பாசல் ஸ்ரட்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: 1000 மக்களுக்குமேல் பங்கெடுக்கத் தடைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: ஆகக்கூடியது 300 விருந்தினர்பாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

பேர்ன்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: 1000 மக்களுக்குமேல் பங்கெடுக்கத் தடைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: ஆகக்கூடியது 100 விருந்தினர்பாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

பிறைபூர்க்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: தடை இல்லை  பாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

ஜெனீவா
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: திறக்கத் தடை  பாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

கிளாறுஸ்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: தடையில்லைபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

கிறபுண்டென்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: தடையில்லைபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

யூறா
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: 15  மக்களுக்குமேல் முகவுறை அணியவேண்டும்தனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: 15 விருந்தினர்களுக்குமேல் முகவுறை அணியவேண்டும்மதுக்கூடம் மற்றும் விடுதிகள்: ஆகக்கூடியது 300 விருந்தினர்பாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

லுட்சேர்ன்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: ஆகக்கூடியது 100 விருந்தினர்பாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

நொய்யென்பூர்க்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: ஆகக்கூடியது 100 விருந்தினர்பாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

நிட்வல்டென்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: இல்லைபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

ஒப்வல்டென்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: இல்லைபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

சப்கவுசென்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: இல்லைபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

சுவிச்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: இல்லைபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

சொலத்தூன்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: 50 மக்களுக்குமேல் காப்பு ஒழுகி இடைவெளி பேணவேண்டும்.  தனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: 50 மக்களுக்குமேல் காப்பு ஒழுகி இடைவெளி பேணவேண்டும்.  மதுக்கூடம் மற்றும் விடுதிகள்: 01. மணிமுதல் 06.00 மணிவரை கதவடைப்புஆகக்கூடியது 300 விருந்தினர்பாடசாலைகள்: வயது வந்தவர்கள் முகவுறை அணியவேண்டும்26. 10. 2020 முதல் நீண்ட நேரத்திற்கு உரிய இடைவெளி பேணா முடியாது போனால் எங்கும் முகவுறை அணிய வேண்டும்.

செங்காளன்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: நடனம் ஆடத் தடை  பாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

ரிச்சீனோ
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: கதவடைப்புபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

துர்க்கா
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: தடை இல்லைபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

ஊறி
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: இல்லைபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

வாத்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: கதவடைப்புபாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

வலிஸ்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: 10 மக்களுக்குமேல் பங்கெடுக்கத் தடைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: 10 மக்களுக்குமேல் பங்கெடுக்கத் தடைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: கதவடைப்புபாடசாலைகள்: இரண்டாம் நிலை முதல் தூரவழிக் (இணையவழி) கல்வி

சுக்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: 100 விருந்தினர்பாடசாலைகள்: சிறப்பு விதி ஏதுமில்லை

சூரிச்
பொது நிகழ்வுகளுக்கு சிறப்பு விதிகள்: இல்லைதனியார் விழாக்கள் சிறப்பு விதிகள்: இல்லைமதுக்கூடம் மற்றும் விடுதிகள்: ஆகக்கூடியது 300 விருந்தினர்பாடசாலைகள்: வயதுவந்தவர்கள் முகவுறை அணியவேண்டும்

தொகுப்பு: சிவமகிழி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment