எல்லாளன் நடவடிக்கையின் போது வீரகாவியமான 21 கரும்புலி மாவீர்களின் 13ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

0 0
Read Time:9 Minute, 0 Second

#விடுதலை புலிகளின் போரியல் சாதனைகள் – “#Operation #எல்லாளன்”
இதே தினம் ,அதாவது 22 ஒக்டோபர் 2007 அன்று, உலகின் போரியல் வரலாற்றில் பிரமிக்கக்கூடிய  சாதனை நிகழ்த்தப்பட்டது.


ஆம். விடுதலை புலிகளினால் அனுராதபுரம் விமானபடை தளம் மீது ‘ எல்லாளன்’ என்ற பெயரில் கமாண்டோ அதிரடி தாக்குதல் ( commando raid) நடத்தப்பட்டது.இந்த கமாண்டோ தாக்குதலினூடாக விமான தளத்தில் இருந்த குறைந்தது 18 போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டன.
அழிக்கப்பட்டவையின் விபரங்கள் கீழ்வருமாறு.“The Colombo correspondent of the “Daily Telegraph” of London has reported that the Black Tigers destroyed an expensive Beechcraft surveillance plane worth £14 million, two Mi17 helicopters, two Mi24 helicopters, three unmanned aerial vehicles, a K-8 jet and eight PD6 propeller trainer aircraft.”
• #விடுதலை புலிகளின் இந்த கமாண்டோ தாக்குதல் பற்றி , விடுதலை புலிகளுக்கு எதிரான கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவந்த முன்னாள் இந்திய றோ உளவுத்துறை அதிகாரி B.ராமன் பின்வருமாறு விவரிக்கிறார்.
“Reliable Western sources say that no other organisation in the world would have been capable of organising such a raid, which had been preceded by painstaking intelligence collection, planning and rehearsal.”
• #உண்மையில் உலகின் எந்தவொரு non state military power உம் இத்தகைய வெற்றிகரமான commando raid ஐ இன்றுவரை நிகழ்த்தியதில்லை.
• #சரி. State Actor கள் ஆன இறையாண்மை அரசின் இராணுவங்கள் இவ்வளவு வெற்றிகரமான commando raid ஐ நடத்தியிருக்கிறதா என தேடி பார்த்தால் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனி, பெல்ஜியத்தில் நடத்திய Battle of Fort Eben-Emael ஐ மட்டும்தான் குறிப்பிட்டு சொல்லமுடிகிறது.
• #ஆனால் இவ்வளவு பெரும் வெற்றிகரமான commando raid தாக்குதல்களை விடுதலை புலிகள் ஒரு தடவை அல்ல. இரு தடவை நடத்தியிருக்கிறார்கள். இதற்கு முன்பு 2001 இல் கட்டுநாயக்கா விமான படைதளம் மீது, இதே வகை தாக்குதல்களை நடத்தி 28 விமானங்கள், ஹெலிகாப்டர்களை அழித்திருந்தார்கள்.
இந்த அனுராதபுரம் விமான படைதளம் மீதான “எல்லாளன்” commando raid இல் 21 கரும்புலி கமாண்டோக்கள் பங்குபற்றினார்கள்.
• #அந்த தாக்குதல் எப்படி நடந்தது என்பதையும் எதிர்தரப்பு B.ராமன் சொன்னதை அப்படியே தருகிறேன்.
“The commandoes, divided into groups, infiltrated into the air base from two directions and, within 20 minutes, took the security guards by surprise, overwhelmed them, seized their weapons and communication equipment, neutralised a radar and an anti-aircraft gun position and then intimated their headquarters that they were in effective control of the air base.
The commandoes remained in effective occupation of the base from 3 AM to at least 9 AM.”
• #இந்த ‘எல்லாளன்’ commando raid இல் புலிகள், இன்னொரு இராணுவ சாதனையையும் நிகழ்த்தினார்கள். புலிகளின் கரும்புலி கமாண்டோக்கள் விமான படைதளத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்னர், வான்புலிகளின் இரண்டு விமானங்கள் குண்டுவீச்சை நடத்திவிட்டு பத்திரமாக திரும்பி சென்றன. இந்த தாக்குதலில் புலிகள், வான்புலிகளின் தாக்குதலை ஒரு புதிய உத்தியாக புகுத்தி பரீட்சித்து பார்த்தார்கள்.
• #இந்த ‘எல்லாளன்’ தாக்குதலிற்கு ஏன் அனுராதபுரம் விமானபடை தளம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கு,புலிகளின் சமர்கள ஆய்வாளராக இருந்த யோகி போரியல் காரணங்களை தாண்டி ஒரு புதிய வரலாற்று கோணத்தை முன்வைக்கிறார்.
‘ #பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சிங்கள மன்னர்களின் தலைநகரமாக அனுராதபுரமே இருந்து வந்தது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து சோழர்களும், பாண்டியர்களும் அவ்வப்போது சிங்கள மன்னர்கள் மீது படையெடுப்பை நடத்தியதால், பிற்காலங்களில் சிங்கள மன்னர்கள் அனுராதபுரத்திலிருந்து பின்னகர்ந்து , தெற்கேயுள்ள பொலனறுவையில் தங்களது தலைநகரை அமைத்துகொண்டனர்.
அந்த கடந்த காலத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவேண்டும் என்ற நோக்கில், அதனை ஒரு குறியீடாக காட்ட , அதே அனுராதபுரத்தை தாக்குவதற்கு தலைவர் பிரபாகரன் தீர்மானித்ததாக’ யோகி குறிப்பிடுகிறார்.
• #அதேபோல், இந்த தாக்குதலுக்கு ஏன் ‘எல்லாளன்’ என்று பெயர் சூட்டப்பட்டது என்பதற்கான காரணத்தையும் புலிகளின் சமர்கள ஆய்வாளர் யோகி பின்வருமாறு விளக்குகிறார்.
‘ இலங்கையின் வடபகுதியை ஆட்சி செய்த எல்லாளன், தமிழ் மன்னர்களில் சிறப்புமிக்கவன். பின்னர் துட்டகைமுனு எனும் சிங்கள மன்னன் போரில் எல்லாளனை தோற்கடித்து, பிற பகுதியிலுள்ள அரசர்களையும் தோற்கடித்து , இலங்கையை ஒற்றை ஆட்சிக்குள் கொண்டுவருகிறான்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும், தான் ஒரு நவீன துட்டகைமுனு என்று தன்னை உருவகப்படுத்துகிறார். அதனால் தமிழ் மன்னன் ‘எல்லாளன்’ பேரிலேயே இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி , ஒரு உளவியல் அதிர்ச்சி கொடுக்கவேண்டும் என தலைவர் பிரபாகரன் நினைத்ததாக ‘ யோகி கூறுகின்றார்.
• #இந்த ‘எல்லாளன்’ commando raid முழுக்க முழுக்க தலைவர் பிரபாகரனின் திட்டத்தில் உருவானது. இந்த தாக்குதல் பற்றி புலிகளின் பெரிய தளபதிகளுக்கே தெரிந்திருக்கவில்லை.
“The Leader was very keen that the operation should not fail. And towards this end, the planning and training for the attack and its execution were kept a top secret. Very few people even at the top most level knew about it. A lot of work had gone into it from the stage of planning to execution,” said S Yogaratnam Yogi, head of the LTTE’s History Division in a panel discussion on Tamil National Television (TNT), a station run by the LTTE, on October 28.
• #விடுதலை புலிகளின் போரியல் தொடர்பான பதிவுகளை நான் தொடர்ந்து எழுதுவதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன.
1. போரியல் பார்வையினூடாக புலிகளின் இந்த நகர்வுகளை உங்களுக்கு விளங்கபடுத்துதல்.
2. உண்மையான போரியல்/ புவிசார் அரசியல் தள பார்வையினூடாக விடுதலை புலிகளின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துதல்.
3. தமிழர்களின் போரியல் வரலாற்றில் , நினைத்து பார்க்க முடியாத, பிரமிக்க வைக்ககூடிய  விடுதலைபுலிகளின்  போரியல் சாதனைகளை,தலைமுறை தலைமுறை தாண்டி கடத்துவதும் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
விடுதலை புலிகளின் பிரமிக்க வைக்கக்கூடிய போரியல் சாதனைகள் , ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் போரியல் வரலாற்றுக்கு சொந்தமானவை.
அத்துடன் எதிர்காலத்தில் தமிழினம் வீழும் போதெல்லாம் , நாம் எழுவதற்கான பலத்தை தருபவையாக புலிகளின் போரியல் வரலாறே இருக்கபோகிறது.
ஒவ்வொரு தமிழரும் விடுதலை புலிகளின் போரியல் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது என்பது வரலாற்று கடமை.
க.ஜெயகாந்த்
(கீழே இணைக்கப்பட்டுள்ள படம் ‘எல்லாளன்’ தாக்குதலில் பங்குபற்றிய கரும்புலி கமாண்டோக்கள் தலைவர் பிரபாகரனுடன் எடுத்து கொண்ட புகைப்படம்.
மற்றைய படம் ‘எல்லாளன்’ தாக்குதலை விவரிக்கின்றது.)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment