சுவிசில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்!

0 0
Read Time:3 Minute, 6 Second

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2020 ஞாயிறு பேர்ண் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடர், ஈகைச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டதோடு அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்ட வேளையில் கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; வழங்கப்பட்டன.

முதற்கரும்;புலி கப்டன் மில்லர் அவர்களின் 33வது ஆண்டு நினைவுகளைத் தாங்கியதுமான இவ்வெழுச்சிநிகழ்வில் கவிதை, பேச்சுக்கள், பாடல்கள்;; இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன்; நிறைவுபெற்றன.

கொரோனாத் தொற்றானது உலகப்பேரிடராக மாறிநிற்கும் இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும,; சுவிஸ் கூட்டாட்சி அரசினால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றிய எமது உறவுகள் கரும்புலிகள் எழுச்சி நினைவில் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி அவர்களுக்குரிய வீரவணக்கத்தினைச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஷமக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்ஷ என்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்தவும், தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டும் ஐ.நா நோக்கி 21.09.2020 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிற்கு பொங்குதமிழராய் அணிதிரளுமாறும் இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றோம்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment