மேஜர் பாரதி அவர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் .

1 0
Read Time:3 Minute, 6 Second

(விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல் துறைத் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றிய மேஜர் பாரதி 07.06.1992ம் ஆண்டு சிறு நாவல் குளத்தில் சிங்களப் படையுடன்நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைந்தார்.)


நான் ஏன் எழுதுகின்றேன் ?
★ஏற்றம் பற்றி பேச்சு நடத்தும் தேசத்துரைமாரே குனிந்து பாருங்கள்.!
ஐ.நா சபையின் அடுக்குமாடிஉறுதியாக உயர்ந்து நிற்கிறதுமனித எலும்புகளின் மகத்தான உறுதியினால்வானைப் பிடிக்க வளர்ந்து வருகிறதுபட்டொளி வீசி பறக்கின்ற கொடியினைஎட்டிப் பாருங்கள் – தொகை வகையாய்சேர்ந்த உயிர்கள் ஆடித்துடிக்கின்றன.
மேடைமீது ஏறி இருந்துஏற்றம் பற்றி பேச்சு நடத்தும்தேசத்துரைமாரே குனிந்து பாருங்கள்பூவாய் இருக்கும் கம்பளம் கீழேபுழுவாய் நெளியும் மனித உடல்கள்அவை உங்கள் குருட்டுக் கண்களைவெருட்டி திறக்கும். கோழிச் செட்டைக்குள்குஞ்சுகள்தன் பாதுகாக்கப்படும்ஆனால் இங்கே பருந்துகள் தானேபாதுகாக்கப்படுகின்றன.
ஐ.நா சபையே உன் ஏமாளித்தனத்தைஎன்னென்று சொல்ல – கோடி கோடியாய்ஏழை உயிர்களை ஏப்பம் விட்டவல்லூறுகளின் வண்டிஊதிப்பெருத்து உள்ளுக்குள் அடங்காதுசெட்டைக்குள்ளே சின்னதாய் தெரியுது
‘உலக சமாதானம் – இந்தஉன்னத கோட்பாட்டிற்குள்தலையைப் புதைக்கும் தீக்கோழி நீமுகம் தெரியாவிட்டாலும் – சீ…முழு உடலும் அம்மணமாய் தெரிகிறது.
உரிமைப்போர் எல்லாம் உன்னால்உறுதிப்படுத்தப்பட வேண்டுமாம்உலகம் சொல்கிறது.சுதந்திரத்தின் சுகம் பற்றி சொல்வதற்குசொந்தமாய் உனக்கேதும் அனுபவம் உண்டா?இல்லையே
எங்கள் தேசம் எங்கள் மக்கள்எமதே உரிமை எனவே நாம்சுதந்திரப் பிரகடனம்செய்து முடித்திடுவோம்.
நாளை தியாகமும் திறமையும்திடமாய் எமை வளர்க்கும் – அப்போதுசமநிலையை சரிப்படுத்த எம்மை நீசந்திக்க வேண்டிவரும்.அக்கணத்தில் சுதந்திரம் பற்றியசொந்த அனுபவத்தைநாங்கள் சொல்லித் தருவோம்.
-ஆக்கம் :மேஜர் பாரதி 
வெளியீடு :வெளியீட்டுப்பிரிவு – விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment