18.05.2026 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்குநியூசிலாந்தின் Auckland நகரில் அமைந்துள்ளNo:202, Hillsborough Rd, Hillsborough 1042 இல்முள்ளிவாய்க்கால் தமிழின நினைவேந்தல் நிகழ்வுமிகுந்த உணர்வுபூர்வமாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்றது.
மேலும்Author: admin
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் அரண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த பல சமர்க்களங்களில் வீரகாவியம் படைத்து தங்களை தமிழீழ விடுதலைக்காக ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 16.05.2026 ஞாயிறு ஊரி மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
மேலும்பிரிகேடியர் சொர்ணம்
எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும். பிரிகேடியர் சொர்ணம்மதிப்பிற்குரிய பெருந்தளபதியுடனான நினைவுகளுடன்…திரு.அச்சுதன்(வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்தவர்)
மேலும்சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அகவை 50.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேமாதத்தில் இருபெரும் வரலாற்று நிகழ்வுகளாக அமையப்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அகவை 50 மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அகவை 50 போன்ற நிகழ்வுகளானது ‘மண்டியிடா வீரமும் வீறுகொண்ட எழுச்சியும்” என்னும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. 10.05.2026 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் நடைபெற்ற இப்ரேழுச்சியில் அரங்கம் நிறைந்த திரளான சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
மேலும்சுவிற்சர்லாந்து நாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் படைத்துறையின் ஒருங்கிணைப்புத் தளபதியுமான மாவீரர் பொட்டு அம்மான் அவர்கள் உட்பட உறுதிப்படுத்தப்பெற்ற இருபத்து நான்கு மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வுகள், இன்று 02.05.2026, சனிக்கிழமை பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்ரேலியா மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் மிகவும் உணர்வு பூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றன.
மேலும்ஒரு தேசம் உதயமாகவேண்டும் அது தமிழீழமே என்ற கொள்கையில் வழுவாது நின்ற மாமனிதர்!
பிரான்சுவாழ் தமிழீழ மக்களின் கண்ணீர் வணக்கம்! 28.04.2026தமிழகத்திலும், தமிழீழ தேசத்திலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசத்திலும் தனது குரல் வளத்தால் வலுவையும், விடுதலை உணர்வையும் ஏற்படுத்தித் தக்க வைத்ததோர் உயிர் இன்று அடங்கிப்போய்விட்டது. காற்றலையிலும், விடுதலையிலும் பின்னிப்பிணைந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பயணித்ததொரு குரல் தனது 85 ஆவது அகவையில் ஓய்ந்து போனது. 1960 களில் பாடத்தொடங்கிய இக்குரல், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை பாடிவந்தது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி என்னும் இடத்தில் சிங்கிரிப்பட்டி கிராமத்தில் பிறந்த இவரின் இசைத்திறமையை, பாடும் ஆற்றலை ஐயா ஆதித்தனார் அவர்கள் கண்டறிந்தார். இவரின் காந்தக்குரல் பாவேந்தர் பாடலுக்கு பெரும் வரவேற்பையும் பெற்றது. அவரே இவருக்கு ‘தேனிசை’ என்னும் பட்டத்தையும் வழங்கியிருந்தார்.
மேலும்பிரான்சில் பல்லின மக்களின் பேரணியோடு எழுச்சியடைந்த தமிழர்களின் மேதின ஊர்வலம்!
பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி Republique (Paris) பகுதியில் இருந்து மதியம் 14.00 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியத் தலைவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியின் மத்தியில் தமிழீழத் தேசியக்கொடிகளைக் கைகளில் ஏந்திய தமிழீழ மக்களும் உணர்வாளர்களும் சிங்கள பெளத்த பேரினவாதம் தொடர்ந்தும் 77 ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் அனைத்து வழிகளிலும் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பை வெளிப்படுத்திய படங்கள் மற்றும் பிரெஞ்சு மொழியிலான சுலோகங்களையும் தாங்கிய ஊர்தியோடு பேரணியில் உணர்வோடு கலந்துகொண்டனர்.
மேலும்பிரான்சில் தமிழின் அழிப்பின் 17 ஆவது ஆண்டு நினைவு!
நாட்டுப்பற்றாளர்”தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 38 வது ஆண்டு நினைவு நாள்.
அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.
மேலும்