தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 03/09/2021 இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு Reims நகரசபை முன்றல் அகவணக்கத்துடன் ஆரம்பமானது தொடர்ந்து Reims, Cormontreuil, Taissy, Sillery, Veuve, Sainte-Menehould, Les Souhesmes-Rampont, Verdun ஆகிய நகரசபை முதல்வர்கள், துணை முதல்வர்கள், முதல்வர்களின் செயலாளர்களிடம் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.
அனைத்து நகரசபைகளும் நீதிக்கான பயணத்திற்கு தங்களுடைய வாழ்த்துகளையும் விரைவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஊட்டினார்கள். தமிழ் மக்களுக்கு எப்போதும் தங்கள் ஆதரவு இருக்கும் என்ற உறுதியையும் வழங்கினார்கள்.




தமிழ் மக்களுடைய நீதிக்காக சில நகரசபைகள் தங்களால் இயன்ற அளவு பணிகளை தமிழ் பண்பாட்டு வலையத்துடன் இணைந்து செயற்படுத்த தங்கள் விருப்பத்தையும் ஆர்வத்தையும் தெரிவித்திருந்தனர்.

இன்றைய நீதிகான பயணத்தில் Reims நகரில் வாழும் தமிழ் மக்களும் இணைந்து போராட்டத்திற்கான தங்கள் பங்களிப்பையும் வழங்கியிருந்தனர்.



ஐ.நா நோக்கிய நீதிக்கான மூன்றாவது நாள் பயணம் Verdun நகரசபையுடன் நிறைவு பெற்றது.