2ம் நாளாக (03.09.2021) பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இருந்து ஆரம்பித்தது.

கடந்த 02/09/2021 அன்று பிரித்தானியாவில் பெரும் மக்கள் எழுச்சியோடு தமிழீழத்தின் விடுதலை வேண்டியும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் பல கட்டமாக அரசியல் சந்திப்புக்களினை மேற்கொண்டவாறு இன்று காலை 03/09/2021 நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் தொடர்ந்தது.

மேலும்

மூன்றாவது நாளாகத் தொடர்ந்து பயணிக்கும் ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணம்.!

தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 03/09/2021 இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு Reims நகரசபை முன்றல் அகவணக்கத்துடன் ஆரம்பமானது தொடர்ந்து Reims, Cormontreuil, Taissy, Sillery, Veuve, Sainte-Menehould, Les Souhesmes-Rampont, Verdun ஆகிய நகரசபை முதல்வர்கள், துணை முதல்வர்கள், முதல்வர்களின் செயலாளர்களிடம் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.

மேலும்