Read Time:49 Second
முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு நாள் மே 18 பிரான்சில் காலை 10.00மணிக்கு செவ்ரோன் என்னும் மாநகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக செவரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பொதுச்சுடர், ஈகைச்சுடர்,மலர்வணக்கம், முள்ளிவாய் க்காலில் உயிர்கொடுத்தவர்களின் உறவுகள் நினைவுச்சுடர் ஏற்றிவைத்தனர். நிகழ்வில் மாநகரமுதல்வர்,துணைமுதல்வர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு உரைகளும் ஆற்றினர்.


