யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பேரினவாத சிங்கள இராணுவம் மற்றும் காவல்துறை சூழ்ந்து நின்று யாரையும் உள்நுளையவிடால் தடுத்து நிற்கின்ற சூழலில் ,தடைகளைத் தாண்டி உள் நுளைந்த மாணவர்களால் சுடரேற்றி தமிழின அழிப்பு மே 18 நினைவேந்தல் நினைவு கூரப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்தமை அங்கு நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

