Read Time:1 Minute, 4 Second
முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தலைமையில் யாழ் மாநகர சபையில் கோவிட்-19 சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இன்று நடைபெற்றது.
இதில் பிரதி முதல்வர் து. ஈசன் உட்பட பல மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன் பின் கருத்து தெரிவித்த முதல்வர் உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவர்களது இழப்புக்கு நீதியை பெற்று கொடுப்பதாகும் என்று தெரிவித்தார். நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட நாம் உறுதி பூணுவோம் என்றும் தெரிவித்தார். இந் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.







