Read Time:49 Second
யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் மகேந்திரன் மயூரன் இருவருக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்காக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மணிவண்ணன் தரப்புக்கு எதிராக கயேந்திரகுமார் தரப்பால் பல லட்சங்கள் செலவழித்து கொழும்பில் இருந்து சட்டத்தரணிகளை வரவழைத்து மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

