Read Time:1 Minute, 17 Second
ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.நா.மனித உரிமகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே இந்திய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காக வெளிநடப்பு செய்துள்ளார்கள் என குற்றம் சாட்டிய வைகோ, இல்லையேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்றும் சாடியுள்ளார்.