இந்தியாவும் ஜப்பானும் நடுநிலைகளை வகித்தன. மேற்கத்திய உலகின் நட்பு நாடாக இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா மிதமான தொனியில் பேசியது.
தமக்கெதிராக முன்வைக்கபடும் என்று இலங்கை எதிர்பார்த்த பிரேரணைக்கு எதிராக நாடுகளின் ஆதரவினைத் திரட்டும் நடவடிக்கைகளில் ஐ நா வின் இலங்கை அதிகாரிகளும், வெளிவிவகார அமைச்சும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது நாம் அறிந்ததே.
அந்தவகையில், தற்போது நடந்துமுடிந்துள்ள விவாதத்தில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் விவாதத்தில் கலந்து பேசியதாகத் தெரியவருகிறது.
பிரித்தானியா தலைமையிலான முக்கிய நாடுகள் இலங்கைக்கெதிரான இந்தப் பிரேரணையினை கொண்டுவந்திருந்தன. ஆனால், இந்தப் பிரேரணையினை ஏற்றுக்கொள்வதில்லை என்று இலங்கை அதனை முறியடிக்கும் விதமாகச் செயற்பட்டுவந்தது.
தனக்குச் சார்பான நாடுகளை அணிதிரட்டும் நடவடிக்கைகளை இலங்கை முடுக்கிவிட்டிருந்தநிலையிலேயே இந்த விவாவதம் நடைபெற்றிருக்கிறது.
ஐக்கிய ராச்சியம், நோர்வே, கனடா, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் நிலையினைக் கடுமையாக விமர்சித்திருந்தன.
ஆனாலும், இலக்கையின் சீனச் சார்பு நிலைப்பாட்டினால் அண்மைக்காலமாக அதிருப்தியுற்றுவரும் நாடுகளான இந்தியாவும், ஜப்பானும் இவ்விவாதத்தில் கலந்துகொள்வதில்லையென்று நடுநிலைமை வகித்தன. மேற்கிற்குச் சார்பான நாடாகவிருந்தாலும், அவுஸ்த்திரேலியா இலங்கை தொடர்பாக மிதவாதப் போக்கினையே இவ்விவாதத்தில் கடைப்பிடித்தது.
இலங்கைக்கு ஆதரவாக விவாதத்தில் பங்காற்றிய 21 நாடுகளில் 10 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சிலில் அங்கத்துவம் வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
இலங்கைக்கு ஆதரவாகவும், பிரேரணையினை எதிர்த்தும் விவாதித்த நாடுகளாவன,
ரஷ்ஷியா, சீனா, பாகிஸ்த்தான், ஈரான், வியட்னாம், மாலைதீவுகள், கியூபா, நிக்கராகுவா, எரித்ரியா (????? நீயுமா), நேபாளம், கம்போடியா, லாவோஸ், அசர்பைஜான், பெலாரஸ், வடகொரியா, கேபொன், பிலிப்பைன்ஸ், சிரியா மற்றும் எகிப்து என்பனவாகும்.
தமிழரின் முதுகில் மீண்டும் ஒருமுறை ஓங்கிக் குத்தியுள்ள இந்தியா இலங்கையின் காலில் விழுந்திருக்கிறது என்பதே உண்மை. சுமந்திரனும், சொல்கெயிமும் கூறும் இந்தியாவிடம் போங்கள் எனும் கோரிக்கைக்கைக்கு என்னவாச்சு?

