தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதற்காக ஒரு வேலைத் திட்டம் கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது

0 0
Read Time:5 Minute, 1 Second

இந்தியாவிலிருந்து ஒரு தொகை பொருட்கள் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதற்காக ஒரு வேலைத் திட்டம் கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது அதற்கமைவாக 06.10.1999 அன்று ஏற்கனவே நிலைகொண்டிருந்த மன்னார் மாவட்ட கடற்புலிகளுடன் .மேலதிகமாக சாள்ஸ்
படையணியும் இணைந்தது.கடற்புலிகளின் சிறப்புத்தளபதியால் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது இத்திட்டத்தின்படி கடற்புலி மேஐர் காமினி அவர்கள் விநியோக நடவடிக்கைக்ப் பொறுப்பாக செல்வதென்றும் விநியோகப் பாதுகாப்புக்குப்பொறுப்பாக எழிற்கண்ணன் அவர்களும் நியமிக்கப்பட்டருந்தார்கள் .ஆனால் இறுதிநேரத்தில் இந்தியாவில் பொருட்கள் எடுக்கும் இடத்தில் சிறிது தூரம் நடந்து எடுக்கவேண்டி இருந்ததால் போராளிகள் கூடுதலாக போடப்பட்டு இத்திட்டம் மாற்றப்பட்டது.புதிதாக மாற்றப்பட்ட திட்டத்தில் விநியோகநடவடிக்கைக்குப் பொறுப்பாக எழிற்கண்ணன் அவர்களும் விநியோகபாதுகாப்புக்குப் பொறுப்பாக அன்றையதினம் சிறப்புத்தளபதி சூசை அவர்களுடன் வந்திருந்த கடற்புலிகளின் துணைத்தளபதி லெப் கேணல் நிறோயன் அவர்களும் நியமிக்கப்பட்டு விநியோக நடவடிக்கை ஆரம்பமானது.07 .10.1999 அன்று அதிகாலை காலநிலை சீரின்மையால் விநியோக அணி மீது தீடிரென வந்த சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் நடாத்தினர் அதனைத்தொடர்ந்து எமது கடற்த்தாக்குதல் அணிக்கும் கடற்படையினருக்கும் அதிகாலை நான்குமணிவரை கடும் கடற்சமர் நடந்தது .விநியோக நடவடிக்கைப் போராளிகள் எவ்வித இழப்பகளுமின்றி தளம் திரும்பினர்.இவ் விநியோக பாதுகாப்புச் சமரில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவரும் தென் தமிழீழ விநியோக நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தவரும் பல கடற்சமரை கடலில் செவ்வனவே வழிநடாத்தியவரும் கடற்புலிகளின் துணைத் தளபதியுமான லெப் கேணல் நிறோயன் உட்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

லெப்.கேணல் நிரோயன்
பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன்
புளியங்கூடல் தெற்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்

மேஜர் காமினி (ஜெயராஜ்)
குப்புசாமி அருணாசலம்
கதிரவெளி, மட்டக்களப்பு

மேஜர் நகுலன்
சண்முகலிங்கம் லோகேஸ்வரன்
மாரீசன்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்

மேஜர் குகன் (செல்லையா)
யோசப் நியூட்டன்
நானாட்டான், மன்னார்

மேஜர் சோழன்
சேவியர் யோசப்பற்றிக்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்

கப்டன் இளநிலவன்
டேவிற் அன்ரன் அருள்தாஸ்
குடத்தனை, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நாகமணி
கோபால் முருகவேல்
தென்னியங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு

லெப்டினன்ட் பாவேந்தன்
இராசதுரை ஜோன்கலின்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் சொற்கோ
இராமலிங்கம் ரவி
முருங்கன்பிட்டி, மன்னார்

லெப்டினன்ட் தமிழ்நம்பி
அருள்யோகநாதன் சுரேஸ்குமார்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் மாறன்
கிருபாகரன் றமணன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் இசைவாணன்
பொன்னுத்துரை தவசீலன்
நீதிபுரம், மாங்குளம், முல்லைத்தீவு

வீரவேங்கை முதல்வன்
சிவபாலசுந்தரம் விஜயராஜ்
6ம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரவேங்கை செம்பியன்
முத்துக்கறுப்பன் நிமலேந்திரன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரவேங்கை இனியவன்
இராசரத்தினம் சசிராஜ்
7ம் கட்டையடி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment