நவரட்ணம் கேசவராஜ் . அரியாலை மத்தி , தற்காலிக வசிப்பிடம் சுதுமலை , மானிப்பாய்.ஈழத்திரைப்பட இயக்குனரான இவர் 1986 ம் ஆண்டு தாயகமே தாகம் , மரணம் வாழ்வின் முடிவல்ல போன்ற படங்களை இயக்கினார் அதன் விளைவாக தேசிய தலைவரின் பாராட்டை பெற்றதுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டார் .
பல வீதி நாடகங்கள் மேடை நாடகங்களை தயாரித்து வழங்கிய இவர் பிஞ்சுமனம் , திசைகள் வெளிக்கும் , கடற்புலிகளின் 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு கடலோரகாற்று , அம்மா நலமா போன்ற படங்களை இயக்கியுள்ளதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் அப்பா வருவார் போன்ற பல குறும்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார் . 2009 இன் பின்னர் முன்னால் போராளிகள் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு பனைமரக்காடு திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார் , இறுதி யுத்தம் வரை தமிழீழ மக்களுடன் பயணித்த இவர் சுவாசபுற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார் ,
கண்ணீர் வணக்கம்
