துயரம் நிறைந்த வல்வைப் படுகொலைகளின் குருதி தோய்ந்த நினைவுகள்…! வல்வை.ந.அனந்தராஜ்

0 0
Read Time:34 Minute, 3 Second

 1975 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற கொடுமைகளுக்கு 1980ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி  மன்னிப்புக் கேட்டார். 1984 ஆம் ஆண்டு நிடைபெற்ற சீக்கியர்களின் படுகொலைக்கு 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மன்னிப்புக் கேட்டார்.

ஆனால்….1989ஆம் ஆண்டு இலங்கை வந்த  இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்கு யார் இப்போது மன்னிப்பு கேட்பது? 1989 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 4ஆம் திகதி வரையுள்ள மூன்று நாட்களிலும் எவரையும் வெளியேறவிடாதும்,எவரும் வெளியில் இருந்து உள்ளுக்குள் வரவிடாதும் தடுக்கும் வகையில் கடுமையான ஊரடங்குச் சட்டத்தைப்  பிறப்பித்துவிட்டு வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகள் வரலாறு காணாத துயரம் தோய்ந்த ஒரு நிகழ்ச்சி ஆகும் என்று தனது தென் செய்தி இணையத்தளத்தில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதிய பழ.நெடுமாறன் அவர்களின் கருத்துக்கள் ஒவ்வொரு இந்திய மக்களின் உணர்வுகளையும் தட்டி எழுப்பியது…! அமைதிப்படை என்ற போர்வையில் தமிழ் ம்ககளின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளைப் புறம் தள்ளிவிட்டு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்,இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியும் தன்னிச்சையாகச் செய்து கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்கனவே உள்ள நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இலங்கைக்கு வருகைதந்த இந்திய இராணுவத் தினர், தம்முடன் கூடடுச் சேர்ந்து செயற்பட்ட தமிழ் ஒட்டுக் குழுக்களின் உதவியுடன்,; 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 2,3,4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறையில் தமிழ் சிவிலியன்கள் மீது மேற்கொண்ட 63க்கு மேற்பட்ட கொடூரமான படுகொலைகள், பல மி;லலியன் ரூபா பெறுமதியான சொத்து அழிப்புக்கள், வீடுகள்,கட்டிடங்களின் எரிப்புக்கள், கொள்ளைகள், தமிழ் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் எனத் தொடர்ச்சியாக இடம்பெற்ற துயரம் தோய்ந்த வடுக்களைச் சுமந்து நின்ற வல்வைப் படுகொலை உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஆறாத வடுக்களாக உள்ளன.இந்த்க கொடூரத்தின் சாட்சியாக இருக்கும் எனது இதயத்தைப் பிழிந்தெடுத்த அந்த நினைவுகளை இன்றும், 30 வருடங்களைக் கடந்தும், மீட்டிப் பார்க்கவே எனது உடல் நடுங்குகின்றது..1989 ஆம் ஆண்டு ஆகஸ்ற் மாதத்தில் அமைதி நிலவிக் கொண்டிருந்த வல்வெட்டித்துறையின் இயற்கைச் சூழலை நிர்மூலமாக்கும் வகையில் இந்திய  ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பாரிய அழிவு நடவடிக்கையான ‘வல்வைப் படுகொலைகள்’ வல்வெட்டித்துறை என்ற மக்கள் செறிந்து  வாழும் சிறிய கிராமத்தில் அரங்கேற்றப்பட்டன. 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ற் 2ஆம் திகதி காலை 11.15மணிக்கு,. வல்வெட்டித்துறை சந்தியில் இருந்து கேட்ட துப்பாக்கிகளினதும்,மோட்டார் குண்டுகளினதும் பாரிய வெடியோசைகள் அந்தச் சின்னஞ்சிறிய நகரையே அதிரவைத்துக் pகொண்டிருந்தன. அன்று  சிவபுரவீதி வழியாகவும், காங்கேசன்துறை வீதி வழியாகவுமாக வல்வெட்டித்துறை ஊரிக்காடு முகாமில் இருந்து ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும், வடமராட்சி இராணுவத் தளபதிகளுக்கும் இடையில் நடைமுறையில் இருந்த கனவான் ஒப்பந்தத்தையும் மீறி, தமிழீழ விடுதலைப் புலிகளைத்  தேடி அழிப்பதற்காக சுமார் முப்பந்தைந்து வரையான இராணுவத்தினர், கனரக ஆயுதங்களுடன் வந்துகொண்டிருந்தனர். இந்த இராணுவ அணிகளுக்கு, ஊரிக்காடு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சுதர்சன்சிங், துணைப் பொறுப்பாளர் கப்டன் கபூர், பொலிகண்டி முகாமின் பொறுப்பதிகாரி கப்டன் கோபால கிருஸ்ண மேனன் ஆகியோர் தலைமை தாங்கினர்.   இந்தநிலையில், விடுதலைப் புலிகள் தற்காப்பு நடவடிக்கையாக இந்திய இராணுவத்தினரின் மீது,சிவபுர வீதியில் வைத்துத் தாக்குதலை மேற்கொண்டதில், அந்த இடத்திலேயே ஆறு சீக் கியச்  சிப்பாய்கள்; கொல்லப்பட்டும், பத்துச் சிப்பாய்கள்; காயமடைந்தும் பின்னர்; மூவர் மரணமடைந்த தையும் தொடர்ந்து சுமார் அரை மணித்தியாலங்கள் வரை அந்தப் பிரதேசம் pஎங்கும் மயான அமைதி நிலவியது. அந்தச் சம்பவம் இடம்பெற்ற அரைமணித்தியாலங்களுக்குள்,  ஏற்கனவே  திட்டமிட்டபடி தயாராக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர்; வல்வெட்டித்துறையைச் சுற்றிவளைத்து மூன்று நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்துவிட்டு, வீடுவீடாகப் புகுந்து  அங்கே இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களையும், ஆவணங்களையும், கால்நடைகளையும் எரித்துக் கொண்டும் கொள்ளையடித்துக் கொண்டும் வந்தனர். அந்த நேரம் வீடுகளிலும், வீதிகளிலும்,ஆலய வீதிகளிலும், கடற்கரையிலும் கண்ணில்பட்ட ஒவ்வொரு தமிழர்களையும் சுட்டும், வெட்டியும் வெறியாட்டமாடியபடி வந்தனர். தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் வழமைபோன்று அன்றும் அப்பாவிப் பொது மக்கள்மீது சரமாரியாகத் தாக்குதல்களை மேறகொள்ளத்  தொடங்கினர். அதேவேளை  வல்வெட்டித்துறையின் சந்தைப்பகுதி,தீருவில்,வித்தனை ஒழுங்கை,சிவன் கோயிலடி, அம்மன் கோயிலடி, ஆதிகோயிலடி மற்றும் நெடியகாட்டுப் பகுதிகளில் இருந்தும் பாரிய வெடியோசைகள் கேட்டதுடன்,அந்தப் பகுதியெங்கும் தீச்சுவாலைகள் வெளிக்கிளம்பி நீலவானத்தைக் கருமையாக்கிக் கொண்டிருந்தன… எனது சகோதரியின் வீட்டை எரித்ததால், கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த தீச்சுவாலையை நீர் ஊற்றி அணைத்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் வீதியால் போய்க் கொண்டிருந்த முப்பது வரையான இராணுவத்தினரின் தொடரணிக்குத் தலைமை தாங்கிச்சென்று கொண்டிருந்த பொலிகண்டி இராணுவமுகாமின் துணைப் பொறுப்பாளரான கப்ரன் பரீக் என்பவன்  என்னைத் தூரத்தில் இருந்தே பார்த்து விட்டான்…..வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் செயலாளராக இருந்து எமது மக்களின் தேவைகள் குறித்தும், இராணுவத்தினரின்  தேவைகள் குறித்தும் பேசுவதற்காக அப்பொழுது யாழ்ப்பாண மக்களுக்குப் பலமான ஒரு தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருந்த பிரஜைகள் குழுவினரின் சார்பில் அதன் செயலாளர் என்ற வகையில் பல தடவைகள் பொலிகண்டி இராணுவ முகாமுக்குச் சென்றதால்,அவர்கள் எல்லோருக்குமே என்னை நன்றாகத் தெரியும்.. அன்று அவர்களால் எரிக்கப்பட்ட வீட்டை அணைத்துக் கொண்டிருப்பதைக்; கண்டதும், வீட்டிற்கு வெளியே வருமாறு கூறி,என்னை வீதிவழியாகக் கூட்டிச் சென்றான்.என்னுடன் மேலும் பதினொரு மாணவர்களையும் கைதுசெய்து,எனக்கு முன்னே கூட்டிச் சென்றான். என்னை வல்வெட்டித்துறைச் சந்தியை நோக்கிக் கூட்டிச் சென்றபொழுது, அங்கே சந்தியில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுக் கைகளைக் கட்டியபடி, முழங்காலில் இருக்கவைத்து,அவர்களைத் துப்பாக்கி முனையில் வைத்திருந்தனர். சந்தியில் உள்ள நவீன சந்தைக் கட்டிடத்தில் உள்ள கடைகளும், அதன் மேல்மாடியில்  இருந்த  வல்வெட்டித்துறை நகரசபைக்குரிய பொது நூலகமும் அதற்குள்ளி ருந்த ஆயிரக்கணக்கான பெறுமதி வாய்ந்த நூல்களும், அதற்கு எதிர்ப்புறமாக உள்ள வல்வை சனசமுக நிலையக் கட்டிடம் என்பனவும் எரிக்கப்பட்டிருந்தன. காங்கேசன்துறை வீதியில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டும், சில மோட்டார் வாகனங்கள் எரியூட்டப்பட்டும் இருந்த நிலை, ஒரு போர்க்களம் போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.அந்தஇடத்தில் எங்கே எந்தப் பக்கம் பார்த்தாலும் இந்திய இராணுவத்தினர் பயங்கரமான ஆயுதங்களை ஏந்தியபடி சுடுவதற்குத் தயார் நிலையில் இருந்தார்கள்… வல்வெட்டித்துறைச் சந்தியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களையும்,என்னுடன் அழைத்து வரப்பட்ட பதினொரு மாணவர்களையும் வரிசையாக நிற்கவைத்து,அவர்களின் கைகளைப் பின்புறமாகக் கட்டி,என்னையும் சேர்த்துச் சுட்டெரிக்கும் வெயிலில் உருகிக் கொண்டிருந்த தார் வீதியினூடாக வெறுங்காலுடன் உடுப்பிட்டி இராணுவ முகாமுக்கு நடத்திக் கூட்டிச் சென்றார்கள்.உடுப்பிட்டிச் சந்தியில் மகளிர் பாடசாலையில் அமைந்திருந்த இந்திய இராணுவமுகாமை அடைந்ததும், என்னையும் மற்றையவர்களையும், அந்த முகாமுக்குப் பொறுப்பான கேணல் சர்மாவிடம் கூட்டிச் செல்லாது, பின்புறமாக உள்ளே அழைத்துச் சென்றார்கள்……அங்கே பிணங்கள் எரிகின்ற வாடை வீசிக் கொண்டிருந்ததால், வயிற்றைக் குமட்;டிக் கொண்டு வந்தது.உள்ளே நுழைந்ததும்,என்னை நோக்கி ஆத்திரத்துடன் வந்த பொலிகண்டி ராணுவ முகாமின் பொறுப்பதிகாரியான கப்டன் கோபால கிருஸ்ண மேனன், பிணங்கள் எரிந்து நாற்றமடித்துக் கொண்டிருந்த வகுப்பறை ஒன்றினைக் காட்டினான்…..அதனை அடுத்து நான் மிரண்டு போயிருந்ததால்,அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்று கலங்கிக் கொண்டிருந்தேன். கப்டன் மேனனுடனும், பிரஜைகள் குழு என்ற வகையில் நாங்கள் நெருங்கிய உறவை வைத்திருந்தபடியால்,அவரால் எங்களுக்கு எவ்வித ஆபத்தும் வராது என்ற ஒரு நம்பிக்கையும் இருந்ததால் சிறிது ஆறுதல் அடைந்தேன்…..ஆனால் அந்த வகுப்பறையில் எரிந்து கொண்டிருந்த ,ராணுவத்தினரின் உடலைப் பார்த்து அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்த பொழுது, அவனுடைய முகத்தின் கோரத் தன்மையைப் பார்த்தேன். நான் சற்றும் எதிர்பார்த்திருக்காத நேரம் பார்த்து,எனது கழுத்தின் பின்புறமாக இறுக்கிப் பிடித்தபடி வேறொரு வகுப்பறைக்குள் கொண்டுபோய்த் தள்ளிவிட்டான்.அது ஒரே இருட்டாக ,ருந்தது….என்னைக் கொண்டு போய் விட்ட வகுப்பறைக்கு அடுத்த ஒரு வகுப்பறையில் தான் என்னுடன் கைது செய்து கொண்டு வந்த 15,16 வயதுடைய மாணவர்களை அடைத்து வைத்திருந்து அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்…அவர்களுடைய மிலேச்சத்தனமான தாக்குதலைத் தாங்க முடியாதவர்களாக அவர்கள் எல்லோரும் அழுது,கூக்குரலிட்டுக் கொண்டிருந்த அந்தச் சோகமான சம்பவம் எனது ரத்தத்தையே ஒரு கணம் உறைய வைத்தது… அவர்கள் எல்லோருமே வல்வைக் கல்வி மன்றத்தில் என்னிடம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ற வகையில் என்னால் அவர்கள் பட்டு;க கொண்டிருக்கின்ற அந்தத் துயரத்தைச் சகித்துக் கொள்ளமுடியவில்லைஆனால் நான் எதிர்பார்திதரு;ககாத நேரத்தில்,ஒரு சில நிமிடங்களுக்குள் நான்கு ஐந்து சீக்கியர்கள் வரை மிக மோசமாக என்மீது தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர்…..அவர்களில் ஒருவன் எனது கழுத்துப் பகுதியில் உள்ள தொண்டையில் மரக் கட்டையை வைத்து அதன் மேல் ஏறிநின்றான்…அந்தத் தாக்குதலினால், எனது மூச்சுத் தட்டுப்பட்டுக் கொண்டே வந்த நிலையில் சாவைச்சந்திக்கத்தானே போகின்றேன் என்ற ஒரு நிலை வந்ததும்,எனது பலம் கொண்டவரை அந்த மரக்கட்டையைத் தள்ளி விட்டதும்,அவன் மதிலுடன் மோதிக் கீழே விழுந்தான்;……அந்த ஆத்திரம் தாங்காத சீக்கியன் அதே கம்பினால் எனது தலை மீது பலமாகத் தாக்கியதும் எனது தலையிலிருந்து  குருதி பெருக்கெடுத்த தும்,நான் அரைகுறை நிலையில் நினைவிழந்து சரிந்து விழுந்துவிட்டேன்…. ……அவ்வாறு நான் நினைவிழந்தநிலையில் சரிந்து விழுந்திருக்காவிட்டால்,அந்தச் சீக்கியச் சிப்பாய்கள் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள்….அதனால், நான் இறந்து விட்டதாகக் கருதியோ என்னவோ  அந்தச் சிப்பாய் ஏதோ ஹிந்தி யில் கூறிக் கொண்டே அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டான். ஆனால் நான் உணர்விழந்தவன் போல் படுத்திருந்தாலும்,அங்கே நடந்தவற்றை அறியக்கூடியதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் அந்த ராணுவ முகாமின் வைத்திய அதிகாரியான கப்டன்.டொக்டர் சௌத்திரி என்பவர் அங்கே வந்து என்னை அடையாளம் கண்டதும்,சில ,ராணுவத்தினரின் உதவியுடன் அந்த முகாம் அமைந்துள்ள பாடசாலைக்கு எதிர்ப்புறமாக உள்ள கடை ஒன்றினுள் வாங்கிலின் மீது படுக்கவைத்து சிகிச்சை அளித்தார். இரண்டாவது நாள் 3ஆம் திகதி,ஒரு ராணுவச் சிப்பாய் எள்னிடம் ஒரு கடிதத்தைத் தந்து,அதில் என்னுடன் கைது செய்யப்பட்ட பதினொரு மாணவர்களும் இரவோடிரவாகத் தப்பி ஓடி விட்டதாகவும், அதற்குச் சாட்சியாகப் பிரஜைகள் குழுவின் செயலாளர் என்ற வகையில் கையெழுத்திடுமாறும் வற்புறுத்திக் கொண்டிருந்தான்….. ஆனால்,அவர்கள்,ராணுவத்தினரால் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டுக் கூக்குரல்கள் கேட்டுக்  கொண்டிருந்ததைக் கூறி அவர்கள் கொல்ல்பபட்டிருக் கலாம் என்ற நிலையில் என்னால் கையெழுத்திடமுடியாது என்று மறுத்ததால்,என்னையும் கொல்லப்போவதாக அச்சுறுத்திக் கொண்டே தொடர்ந்தும் என்னை மிரட்டிக் கொண்டேயி ருந்தார்கள்……இரண்டாவது நாள் விடுதலை செய்யப்படவேண்டிய நான் தொடர்ந்தும், மூன்று நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்….ஆனால் தற்செயலாக மூன்றாவது நாளான 4 ஆம் திகதி வடமராட்சியின் யாக்கரை பிரதான முகாமின் பொறுப்பதிகாரியான பிரிகேடியர் சங்கர் பிரசாத் என்னைத் தடுத்து வைக்கப்பட்ட  இடத்திற்கு வந்து என்னுடன் பேசியதால் 4ஆம் திகதி பிற்பகல் என்னை விடுவித்து வீட்டிலேயே கொண்டு வந்து விட்டார்கள்.இந்த இருண்ட யுகத்தைச் சந்தித்த மூன்று நாட்களுக்குள் தான் வல்வெட்டித்துறை என்ற அந்தச் சிறிய கிராமத்தினுள் புகுந்த இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலைகள் இந்திய அரசின் ஆதரவுடனேயே நடந்தேறியது.ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து 2 ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச்சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டத்தினை பிரகடனப் படுத்திவிட்டு கொலை வெறியாட்டம் ஆடினர். வெளியில் இருந்து யாருமே வல்வெட்டிதுறைக்குள் நுழையவோ அல்லது அங்கிருந்து தப்பிவரவோ முடியாத அளவுக்கு அவர்களது வெறியாட்டம் தொடர்ந்து நீடித்தது. அந்த மூன்று நாட்களும் வல்வெட்டித்துறை இருண்ட உலகத்திலேயே  மூழ்கிப் போய் இருந்தது.  அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் வெளி உலகத்திற்குக் கொண்டுவரப்படமுடியாத அளவுக்கு எந்த ஊடகவியலாளரையும் இராணுவத்தினர்  அனுமதிக்கவில்லை. இந்திய இராணுவத்தினரின் அந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரும்பியபின் வல்வெட்டித்துறைக்குச் சென்று பார்த்தவர்களால் அங்கு நடைபெற்று முடிந்த கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை. அன்று வல்வெட்டித்துறையைச் சுற்றி வளைத்து திறந்த சிறைக்குள் மூன்று நாட்களாக வைத்திருந்து, இந்தியப் படையினரின் கோரத் தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட பேரழிவுகளாக:  ஆண்,பெண்,முதியோர்,குழந்தைகள் என்ற வேறுபாடு,ன்றி  63 பொதுமக்கள்சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் முகங்குப்பறப் படுக்கவைக்கப்பட்ட நிலையில் முதுகில் சுடப்பட்டிருந்தனர். காயப்பட்டவர்களில் எட்டு பொது மக்கள் சம்பவம் நடந்து பத்து நாட்களின் பின்னர் மரணமடைந்ததைத் தொடர்ந்து  கொல்லப்பட்டோரின் தொகை 71 ஆக உயர்ந்தது.123 வீடுகள்முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதுடன், 45கடைகளும் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டன. சனசமூகநிலையங்கள், பொதுநூலகம், பாடசாலைகள் என்பன தீயிடப்பட்டன, அங்கிருந்த பல ஆயிரக்கணக்கான நூல்கள்.தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன், நூலகத்தில் இருந்த காந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற இந்தியத் தலைவர்களின் படங்கள்  கூட நொருக்கப்பட்டு தீயிடப்பட்டிருந்தன.• 176 மீன்பிடிப் படகுகளும், 25க்கும் மேற்பட்ட வாகனங்களும்; எரியூட்டப்பட்டன.• பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டனர்.• வல்வெட்டித்துறை சிவன் கோயில், வல்வை முத்துமாரி அம்மன் கோயில், கப்பலுடையவர் கோயில், ஆதிகோயில்,,சென்செபஸ்தியார் கோயில் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வணக்க ஸ்தலங்கள் எரியூட்டப்பட்டன. இந்திய இராணுவத்தினரின், இந்தக் கொடூரமான படுகொலைகள், சர்வதேசத்திற்கு வெளிப்படுத்து வதற்காக என்னால் எழுதப்பட்ட ‘வல்வைப் படுகொலைகள்’; என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட நூல்கள் தமிழகத்திலும் டில்லியிலும் வெளியிடப்பட்டதுடன் வீடியோ விவரணச் சித்திரமும் வெளியிடப்பட்டன. இதற்கான அணிந்துரை முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் அவர்களினால் வழங்கப்பட்டது. அன்று வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவினரால் இந்தச்சம்பவம் சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டதால், இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டதால், இந்தியப்படையினர் ஈழத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை  ஏற்படுத்தியது.    1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற  அந்தப்  படுகொலைகளின் கொடூரத்தை உலகுக்கு வெளிப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் சத்தியப்பிரமாணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்பவற்றை எடுத்துக்கொண்டு, தமிழகத்திற்குச் சென்று, அப்போதைய முதலமைச்சர்  மு.கருணாநிதி மற்றும்  வை.கோபாலசாமி, பழ.நெடுமாறன், திராவிடர் கழகத்தலைவர் வீரமணி போன்ற பல தலைவர்களைச் சந்தித்து அவர்களிடம் நான் கொண்டு சென்ற ஆவணங்களையும்,புகைப்படங்களையும் கொடுத்து?,வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினரால் மேற்கெரள்ளப்பட்ட படுகொலைகள் பற்றி விளக்கமளித்ததைத் தொடர்ந்து   சமதாக்கட்சியின் தலைவராகவும் பின்னாளில்  பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த ஜோர்ஜ் பெர்னான்டசைக்  கடலூரிலும் சந்தித்து, வல்வைப் படுகொலைகள் மற்றும் சொத்துக்கள் அழிப்புக்கள் என்பவை தொடர்பான ஆவணங்களையும் புகைப்படங்களையும், வீடியோ ஒளிநாடாவையும் கையளித்து,விரிவாக விளக்கியபொழுது அவரும் மிகவும் உன்னிப்பாகவும், அனுதாபத்துடனும் கேட்டார். அன்று ஜோர்ஜ் பெர்ணான்டஸ் தந்த உற்சாகமும், ஆதரவும் இந்திய இராணுவத்தினரின் கொடூரமான தாக்குதலை வருணிக்கும் விவரணச் சித்திரமான வல்வைப் படுகொலை நூலுக்கு முக்கியத்துவம் அளித்தது.பல வருடங்களின் பின் பழ.நெடுமாறன் தனது கட்டுரையில்  ‘சீக்கியர்களிடம் மனனிப்புக் கேட்ட இந்தி;ராகாந்தி…..ஈழத்தமிழ் மக்களைக் கொன்றொழித்ததற்காக இந்தியா ஈழத் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்குமா…?’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இதேகேள்iவியையே நாங்கள் மட்டும்லலாது தமிழக அரசியல் தலைவர்களும், உலகத் தமிழ் மக்களும் கேட்கின்றார்கள். ஆனால் தொடர்;சசியாக, ஈழத் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் எதிராக ஸ்ரீலங்கா அரசுக்கும்,அரச படைகளுக்கும் உதவிகளை வழங்கித் தமிழ் மக்களின் போராட்டத்தை அழித்து,தமிழ் மக்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்த இந்தியாவின் மீதான வெறுப்பும்,கோபமும் இன்றும் எமது மக்களிடையே ஊறிப்போய் உள்ளது. வல்வெட்டித்துறையில் உள்ள ஒவ்வொருவரின் வீடுகளிலும்,ஈழத் தமிழ் தலைவர்களுக்குக் கொடு;தத முக்கியத்துவத்தை விட இந்திய அரசியல் தலைவர்களான மகாத்மா காந்தி,ஜவகர்லால் நேரு,இந்திரா காந்தி,நேதாஜி ஆகியோரின் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதைப் போன்று, முக்கியமான ஒரு சம்பவமாக இந்தியாவுக்கு எமது மக்கள் எவ்வளவுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர் என்பதற்கு அடையாளமாக தேசியத் தலைவரின் மூதாதையர்களுக்குச் செர்நதமான வல்வெட்டித்துறை சிவன் கோயிலின் கோபுரத்தின் தெற்குப்புறமாக மகாத்மா காந்தியின் சிற்பம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனைப் போன்ற ஒரு சிற்பம் வல்லிபுரக் கோயிலின் கோபுரத்திலும் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் எந்தக் கோயிலின் கோபுரத்திலாவது காந்தியின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் என்று நான் கருதவில்லை…..அப்படி இந்தியாவுக்கான உண்மையான விசுவாசமுள்ள மக்கள் வாழ்ந்துவரும் வல்வெட்டித்துறையை இந்த அளவுக்கு அழித்துத் துவம்சம் செய்ய, அவர்களுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை….!1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி தென் வியற்நாமின் மைலாய் கிராமத்தில்; 2ம் லெப். வில்லியம் கேலி என்பவனின் தலைமையில் நுழைந்த அமெரிக்கப் படைகள் அந்தக் கிராமத்தைச் சுற்றி வளைத்து, எழுந்தமானமாகத் து;பபாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில்; 500 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொடூரமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர்.ஆனால்,இந்தப்  படுகொலைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து அமெரிக்க அரசை நிலைகுலைய வைத்தவர்கள் அமெரிக்கர்களும், அமெரிக்க ஊடகங்களுமே என்பதை நினைக்கும பொழுது பெருமை யாகவும், அதேவேளை இந்தியப் படைகளினால்,ஈழத் தமிழ்மக்கள் வகை தொகையின்றிப் படுகொலைகள் செய்யப்பட்ட பொழுது,இந்திய மக்களும்,இந்திய ஊடகங்களும் மௌனம் சாதித்ததை நினைக்கும் பொழுது கவலையாகவும் இருக்கின்றது. இப்படுகொலை நிகழ்வானது உலகின் பல இடங்களிலும் அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வியட்நாம் போரில் ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து உள்நாட்டிலும் பெரும் எதிர்ப்புகள் தோன்றின.அதேவேளை  இந்தியப் படையினரால் வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட  படுகொலைகள் தொடர்xபான விபரங்கள் அன்று  ‘டெய்லி டெலிகிராஃப்’  ‘பைனான்சியல் டைம்ஸ்’ ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’  மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள்  மூலமூம் வெளிவந்தபொழுது தான் உலகமே அந்தப் படுகொலை களின் கொடூரத்தைப் புரிந்து கொண்டது. வல்வைப் படுகொலைகளுக்குச் சமமான முறையில், வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியான் என்ற இடத்தில் உள்ள பார்க்கில் கூடிநின்ற மக்களைச் சுற்றி வளைத்து 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதியன்று ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவத் தளபதியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் கண்மூடித்தனமாக நிகழ்த்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில், பெண்கள், சிறுவர்கள் உட்பட 379 பேர் கொல்லப்பட்டனர்.ஆனாலும் சுயாதீன  தகவல்களின் அடிப்படையில் சுமார், ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.  100 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் பொதுமக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொன்ற பிரித்தானிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப் பட்ட படுகொலைகளுக்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரித்தானியப் பிரதமராக இருந்த தெரேசா மே பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது போன்று, இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவினால், மேற்கொள்ளப்பட்ட கொடூரமான படுகொலைகளுக்காக இந்தியாவும் ஒரு நாள் வருத்தம் தெரிவிக்கும் என்று நம்புகின்றோம்….!ஆதன் மூலம் நீதி மறுக்கப்பட்ட ஈழத் தமிழ் wமக்களுக்கான நியாயமான தீர்வiயும்,சுபீட்சமான வாழ்வையும்,நீதியையும்  சர்வதேசம் பெற்றுத் தரும் என்றும் எதிர்பார்க்கின்றோம்…!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment