எமது தேசியத்தலைவருக்கு அகவை72

0 0
Read Time:2 Minute, 13 Second

கார்த்திகை மாதச் சூரியன்

கார்த்திகை மாதச் சூரியன் – இவன்
காலங்கள் தாண்டியும் வாழ்பவன்
நேற்றைய வாழ்வின் தாயவன்
தமிழ் நெஞ்சத்தில் வாழும் தூயவன்…

உயிரைக் கொடுத்தே போனான் என்றும்
உணர்வாய் தமிழை ஆள்வான்
என்றும் உணர்வாய் தமிழை ஆள்வான்…

(கார்த்திகை…)

சரணம் 1

இவனாலே இருள் அன்று தொலைந்தது
இவன் விரல் காட்ட அம்புகள் பாய்ந்தது
திசை எங்கும் வெற்றியால்;
தமிழ் நிமிர்வோடு எழுந்தது
பகை திகில் கொண்டு அரண்டது
பகை திகில் கொண்டு அரண்டது…

(கார்த்திகை…)

[பல்லவி

கார்த்திகை மாதச் சூரியன் – இவன்
காலங்கள் தாண்டியும் வாழ்பவன்
நேற்றைய வாழ்வின் தாயவன்
தமிழ் நெஞ்சத்தில் வாழும் தூயவன்…

சரணம் 2

வரிசையாய் விதைகளை நட்டான்
தன் விழியோரம் கண்ணீரும் விட்டான்
தலையை நிமிர்த்தினான்
பல பகைவரைத் துரத்தினான்…

நெஞ்சோடு விடமாட
துணிவோடு களமாட
எழுந்தனர் நடந்தனர் வீரர்கள்…

பகை பஞ்சாகப் பறந்திட
தம்முயிர் கொடுத்தவர்
நிலையாக வாழ்கிறார்கள்
வாழ்வார்கள் தூயவர்…
தூயவர்…

(கார்த்திகை…)

சரணம்

தனக்காக வாழாதவன் –
பிறர் முன் தலைதாழ்த்தி வீழாதவன்…
அனைத்தையும் கொடுத்தானிவன் –
எங்கள் அண்ணனாம்…
இவன்தான் அவன்…

பல்லவி

கார்த்திகை மாதச் சூரியன் – இவன்
காலங்கள் தாண்டியும் வாழ்பவன்
நேற்றைய வாழ்வின் தாயவன்
தமிழ் நெஞ்சத்தில் வாழும் தூயவன்…

உயிரைக் கொடுத்தே போனான் என்றும்
உணர்வாய் தமிழை ஆள்வான்
என்றும் உணர்வாய் தமிழை ஆள்வான்…

கார்த்திகை மாதச் சூரியன்…
காலங்கள் தாண்டியும் வாழ்பவன்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment