பிரான்சில் உணர்வடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தலும்

0 0
Read Time:5 Minute, 8 Second

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கடந்த (26.09.2026) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -, ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஆர்ஜொந்தே பிராங்கோ தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் திரு.பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

பிரெஞ்சு தேசத்தின் தேசியக்கொடியை ஆர்ஜொந்தை நகர பிதா அவர்கள் ஏற்றிவைக்க,
தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியல் பிரிவு பொறுப்பாளர் திரு .நிந்துலன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஈகைச்சுடர் ஏற்றல், மலர்வணக்கம் மற்றும் மலர்மாலை அணிவித்தல் ஆகியவற்றை மாவீரர் குடும்ப உறவுகள் செய்ததைக் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

ஈகைச்சுடர் ஏற்றல் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு 20.03.1990 அன்று மன்னார் சிலாவத்துறை முகாம் முற்றுகையில் வீரச்சாவடைந்த லெப்.நாதன் அவர்களின் சகோதரனும் கேணல் சங்கர் முகிலன் அவர்களுக்கு 2009 அன்று வீரச்சாவடைந்த மேஜர் செஞ்சுடர் அவர்களின் சகோதரனும் மாவீரர் பொதுப்படத்திற்கு முல்லை கடற்பரப்பில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த கப்டன் செம்முகிலன் அவர்களின் சகோதரனும் ஏற்றிவைத்தனர்.

மலர்வணக்கத்தை தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபிக்கு 20.06.1999 அன்று கொக்குவிலில் நேரடி மோதலில் வீரச்சாவடைந்த இன்பம் மாஸ்டர் அவர்களின் சகோதரனும் கேணல் சங்கர் அவர்களுக்கு 02.04.2000 அன்று இத்தாலில் பகுதியில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப்.காண்டீபன் அவர்களின் சகோதரியும் மாவீரர் பொதுப் படத்திற்கு 19.01.1997 அன்று முல்லை கடற்பரப்பில் வீரச்சாவடைந்த கடற்புலி 2 ஆம் லெப்.ராஜமோகன் அவர்களின் சகோதரனும் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் உணர்வோடு அணிவகுத்து சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழ்ச் சோலைப் பள்ளி மாணவர்களின் எழுச்சி நடனங்கள், கவிதைகள், ஆர்ஜொந்தை நகரபிதா மற்றும் உறுப்பினர்களின் உரை, தமிழ்ச் சோலை மாணவர்களின் எழுச்சி கானங்கள் என்பன சிறப்பாக இடம்பெற்றிருந்தன.

சிறப்பு நிகழ்வாக “உயிரெழுத்து” நாடகம் இடம்பெற்றது. இதில் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஈகம் பற்றியும் இன்றைய தமிழ் அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும் இளையோர்கள் தமிழ்த் தேசியத்தின் வழியில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதாக அமைந்திருந்தது.

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவுரையை அன்னை பூபதி அறக்கட்டளை ஒன்றியப் பொறுப்பாளர் திரு.அமுதன் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் குறித்த மாவீரர்கள் தொடர்பில் உணர்வு மிக்க வீரஞ்செறிந்த பல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

அடுத்து, தியாக தீபம் நினைவாக அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்ட உணர்வாளர்களுக்கு குளிர்பானம் வழங்கி நிறைவுசெய்து வைக்கப்பட்டது

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்த பின்னர். தமிழீழத் தேசியக்கொடி மற்றும் பிரெஞ்சுத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது

(செய்திப் பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment