71 வது அகவைநாள்வாழ்த்துகள் தலைவா

1 0
Read Time:4 Minute, 6 Second

நாங்கள் மெல்ல நடந்துகொண்டிருந்தோம்
எங்கள் முன்னே நீ நின்றாய்
அப்போதுதான் இருண்டு கிடந்தது
அந்த வானம்.


நந்திக்கடலோர கரையில்
இரவின் போர்வைக்குள் இருந்தபடி
நாங்கள் உன்னைப் பார்த்தோம்!
நீயும் எம்மைப் பார்த்தாய்!
அந்த மெல்லிய இரவில்
வானத்தில் ஒளிர்ந்த
விண் மீன்களின் ஒளியில்
நிலா போல ஒளிந்தது உன் சிரிப்பு!

எப்போதும் போலவே
அந்தச் சிரிப்பில் உயிர் இருந்தது!
புலிகள் நாங்கள் தோற்கவில்லை!
புலிகள் எப்போதும் தோற்பதில்லை!
என்று கூறியது அந்தச் சிரிப்பு!

நாம் உன்னருகில் வந்தோம்
“எங்கே போகிறீர் புலிகளே”
என்று கேட்டாய்.
“அண்ணை தடையுடைக்கப் போறம்”
என்று சொன்னோம்.
“உங்கள் வழமையான பணிதான்
தடை உடையுதோ இல்லையோ?
தொடர்ந்தும் போர் செய்வோம்!
இது எங்கட நாடு!
இலங்கை முழுதும் தமிழரின் நாடு!
அழிவுகள் பற்றிய கவலை வேண்டாம்!
அழகிய தமிழீழம் வேண்டும்!
பேசுவதில் பயனில்லை!
போர் செய்வதில் அச்சமில்லை!
இந்த அழிவு பெரிதில்லை!
நந்திக்கடல் எங்கள் முடிவில்லை!
அடிமேல் அடிப்போம்!
உளி மீது இரக்கம் கொண்டால்
சிலை இல்லை!
உயிர் மீது அச்சம் கொண்டால்
தமிழீழம் இல்லை!
எந்நிலை வரினும்
தமிழர் அறம் தவறோம்!
தலையே போகினும் தடுமாறிடோம்!
தமிழர் விடிவுக்காய்
எமதுயிர் போகட்டும்!
தமிழீழம் விடியட்டும்! “
என்றுரைத்தாய்!

போரின் கீதமாய் ஒலித்த
உன் குரலின் பெரும் அமைதி
சூறாவளிக்கு முந்தைய
அமைதி போலுள்ளது.
நந்திக்கடல் பேரிழப்பு
தமிழீழப் போரின் சாவு அல்ல!

இன்னும் எங்கள் இதயத்தில்
நீயே இருக்கிறாய் தலைவா!
இனியும் எங்கள் இதயத்தில்
நீயே இருப்பாய் தலைவா!

சூரியன் போலவே உன் நினைவுகள்
எங்கள் உள்ளத்தை வெப்பமூட்டுகிறது!
உன் சிரிப்பு இன்னும் காற்றில் மிதக்கிறது!
போர் நிறைந்த இந்த உலகில்
தமிழரின் ஓய்வில்லா வீரமாய்
நீயே இருக்கிறாய்!

நாம் வாழும் ஒவ்வொரு நொடியும்
“தமிழீழம்” எனும் பெரும் கனவுடன்
உறுதியுடன் நடக்கிறோம்!
எங்கள் மனதில் அச்சமில்லை!
நீ போட்ட அடித்தளம் அசையாது!
நீ தந்த அடையாளம் மறையாது!

எங்கள் கண்களில் உன் காட்சிதான்
என்றுமே தெரிகிறது!
நீ பாடிய விடுதலைப் பாடலையே
எங்கள் வாய்களும் பாடுகிறது!
நந்திக்கடல் போரின் வெற்றி
சிங்களுத்துக்கு நிரந்தரம் இல்லை!
எங்கள் விடுதலைத் தீயை
கடலால் கூட அணைக்கமுடியாது!

எங்கள் உறுதியே!
எங்கள் உணர்வே!
எங்கள் உயிரே!
எங்கள் உலகே!
எங்கள் வீரமே!
எங்கள் வீரனே!
எங்கள் காலமே!
எங்கள் கரிகாலனே!
எங்கள் தேவனே!
எங்கள் இறைவனே!
உலகத் தமிழர்களின்
ஒரே தேசியத் தலைவனே பிரபாகரனே!
உனை வணங்குகிறோம்!
உறுதி கொள்கிறோம்!
தமிழீழத் தனியரசை நிறுவும்வரை
ஓயமாட்டோம்!
எங்கள் கடவுளே பிரபாகரனே…
ஓயமாட்டோம்! ஓயமாட்டோம்!
கொற்றவையின் பேரனே!
வல்லமை தா!
எங்கள் வாழுக்குக் கூர்மை தா!
வெற்றியை உன் காலடியில்
விரைவில் படைக்கிறோம்!
சி. செ. புலிக்குட்டி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment