Read Time:49 Second
களத்திடை விழுப்புண் ஏந்திய புலியே
உளத்தினில் உறுதியைத்தாங்கிய எரியே
துணிவோடு களம்மீதில்
பகையோட்டினாய் வயிற்றோடு
படுகாயம்
தனைத்தாங்கினாய்
குடல்தன்னில் சிறுதுண்டை இழந்தபின்பும்
எதுவும் நடவாததுபோலவே
நடமாடினாய்
திடமோடு மக்கள்பணி
உளமேற்றினாய்
பொழுதெல்லாம் அவர்களுக்கே உரித்தாக்கினாய்
உயிர் உடல் உணர்வுகள் அவருக்கென்றே உருக்கினாய் உதிர்ந்தாய்
உண்மையானாய்
அழுகிறோம் ஆறவில்லை இன்றளவும்..உன் கனவு இன்னும் மெய்ப்படவில்லையே திலீபனண்ணா
கலைமகள்
