Read Time:42 Second
பெண்மையைப்போற்றினாய்- அவருக்குள்
பெருவீரம் ஏற்றினாய்
தணலாக ஆற்றல்கள்
தம்மனத்துள் வைத்திருந்த
தமிழீழமங்கையர்தம்
திறனனைத்தும் ஒளிரச்செய்தாய்
வீட்டின் நலன்மட்டுமல்ல நாட்டின் நலனிலும்
நற்பணியாற்றும்
புரட்சிப்பெண்களாய் நிமிரச்செய்தாய்
சுதந்திரப்பறவைகளாக அவர்கள்
சுடர
வழிசமைத்த அண்ணனின்
எண்ணத்தை
வண்ணம்செய்தவனே திலீபனண்ணா
நீ புரட்சியின் நாயகன்-பெண்கள் எழுச்சியின்
காரணன்…
கலைமகள்
