கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு
காலம்: 05.07.2025 சனி, 15:30
இடம்: Tell Kultur Zentrum, Bernstrasse 101, 3072 Ostermundigen
*தரை, கடல், வான், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ – அங்கேயே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்களுக்கான நாள்.
*தடைகளை அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள்.
*தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள்.
*பல ஆண்டுகளாக எதிரியின் மத்தியில் உலாவி, தேசிய விடுதலையை மட்டுமே தமது தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராமல், தமது பாதையில் எத்தடை வரினும் அதை உடைத்தெறிந்து தமது கடமையை செய்த நெருப்பு மனிதர்களுக்கான நாள்.
- தமது முகத்தையோ, முகவரியையோ, காட்டாமல், தமக்கென சுயநல பெருமை தேடாமல் தமிழ்த் தேசத்தின் இருப்பை நிலை நாட்டிய
இரும்பு மனிதர்களாக,
அடையாளம் மறைத்து தமிழீழ விடுதலைக்கு தமது அர்ப்பணிப்பாலும் செயலாலும் தம்மை உரமாக்கிவர்களை நினைவுகூரும் நாள்.”
*அரசியல் விடுதலையை வென்றெடுப்பதில் எமது இனத்திற்கு இருக்கும் உறுதிப்பாட்டினதும், அர்ப்பணிப்பான உணர்வினதும் வெளிப்பாடு அவர்கள். அவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல, எம்முன் எல்லாமுமாய் நிறைந்தவர்களை நினைவுகூர்ந்து உறுதியெடுக்க அனைவரையும் அழைக்கின்றோம்.
தமிழீழவிடுதலைப்புலிகள்
சுவிஸ் கிளை
01.07.02025
கரும்புலிகள் நாள் – 2025 சிறப்பு வெளியீடு(05.07.2025)
கந்தகம் சுமந்த கரியபுலிகளின் பேரிடிகளிற்குப் பின்னே எழுதப்பட்ட வீரவரலாற்றைக் கொண்டு வெளிவரும் ஆரிவரோ பாடல்..
கரும்புலிகள் நினைவோடு பகிர்ந்திடுவோம்.
வெளியீடு :வெளியீட்டுப் பிரிவு,
அனைத்துலகத் தொடர்பகம்.
