தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கிட்ணன் செல்வராஜ் அவர்களுக்கு,

1 0
Read Time:2 Minute, 46 Second

நாம் தோழர் சண்முகதாசன் காலத்து முற்போக்காளர்கள். தேசிய இன ஒடுக்குமுறை, நாட்டின் பிரதான முரண்பாடாக மேலோங்கியதால் ஈழப்புரட்சி அமைப்பில் இணைந்தோம்.
எமது அரசியல் சிந்தாந்தமாக மாக்சியத்தை வரித்துக் கொண்டோம்.
நாம் தமிழ்த் தேசிய பேரினவாதத்தைப் பேசவில்லை. மலையக மக்கள் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் நீட்சி என்று பேரினவாத வகுப்பு எடுக்கவில்லை.

தேசிய இனங்களின் மீதான பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் மிலேச்சத்தனமான ஒடுக்குமுறையால் சகல தமிழ் மக்களும் பாதிப்படைந்தனர். ஆதலால் சகல ஒடுக்கப்படும் மக்களின் குரலாக திம்புவில் ஒலித்தோம்.

தோழர் காதர் அவர்கள் மோகன்ராஜ் என்ற பெயரில் எழுதிய “இருபதாம் நூற்றாண்டின் அடிமைத்தனம்”என்கிற மலையகம் பற்றியதான வரலாற்று நூல் எம்மால் 1984ஆம் ஆண்டில் சென்னையில் வெளியிடப்பட்டு, அதன் மறுபதிப்பு பலரின் உதவியோடு தமிழ்நாட்டில் மீண்டும் அண்மையில் வெளியிடப்பட்டது.

அடுத்து இடைக்கால கணக்கு அறிக்கை விவாதத்தில் மாவீரருக்கான அஞ்சலி பற்றி நாடாளுமன்றில் பேசியிருந்தீர்கள்.

அது பற்றியும் குறிப்பிட வேண்டும்.

மாவீரர் பட்டியலில் வடக்கு-கிழக்கு-மலையகம் உட்பட அனைத்து போராளிகளின் பெயர்களும் உண்டு.
பிரித்துப் பார்த்து வீரவணக்கம் செய்யும் பிரித்தாளும் மரபு எம்மிடம் இல்லை. சாதி,மத,பிரதேச வேறுபாடற்ற முற்போக்குக் கோட்பாடே விடுதலைப் போரில் முதன்மை பெற்றது.

இவற்றை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வீர்களென நாம் உணர்கிறோம்.

விமர்சனங்களை நாம் வரவேற்கின்றோம். ஆனால் தேசிய இனங்களிடையே முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்கக்கூடிய வகையில் எமது சொல்லும் செயலும் அமைய வேண்டும் தோழர்.
200 வருட காலமாக வலி சுமக்கும் உங்களுக்கு இவை நன்கு புரியும் தோழா👍🏼

தோழமையுடன்
இதயச்சந்திரன்
(7/12/2024)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment