உயிரோடு கலந்தோடும்
உரிமையின் உணர்வோடு
உயிரீந்த மறவர் அவர்
உன்னதங்கள் உரக்கப்பாடு
வீரத்தின் காவியமாய்
விழுதெறிந்தபெர்ந்தருக்கள்
பாரும் வியந்துபார்க்கும்
பலவான்கள் பேறுபாடு
தனக்கென வாழ்வோரிடையே
பிறர்க்கென தம்மைத்தந்தோர் பெருமையைப்போற்றிப்பாடு
அருமையாய்ப்பெற்றோம்-தமிழர்
அறங்காக்கும் -புதிய
புறமெழுதிப்புன்னகைக்கும்
பூக்களைப் புகழ்ந்துபாடு
தமிழீழத்தாயைக்காக்க
தாயகத்தின் உரிமை மீட்கப்
பெருவரமாய் பிரளயமானோர் பேராற்றல் ஏற்றிப்பாடு
தந்தைப்புலி தாயான தவவலிமை நாயகனாம்
எந்தையர் குலத்தமிழன்
விந்தைத்தலைவன்வழி
சிந்தை தெளிந்தவராய்
செயல்வீரச்செம்மல்களாய்
முந்தைத்தமிழ்மானம் முப்பொழுதும் காக்கும்-எங்கள்
அந்தமிலாச்சாமிகளின் அருள்வேண்டி அகவல்பாடு
பண்பாட்டுஅறிவோடு பணியாற்று நிமிர்வோடு
பலநூறு தடைவரினும்
துணிவேற்று மனதோடு
அணிகள் பல பிளந்து எம்மை ஆட்டிவைக்கும் வஞ்சக
உலகோடு போராடு உறுதியுடன் நடைபோடு
பெருந்தலைவன் தவப்பிறப்பைப்
புரிந்து மனத்தெளிவுகொண்டு
புலிவீரர் மாண்புகளை ஆராய்ந்து அறிந்துதெரிந்து
தளராது அவர்வழிநடந்து
விடுதலைஒளியைக்காட்டி
அடுத்தடுத்த தலைமுறைக்கு
எடுத்தியம்பு -தமிழர்தம்
தடம்மாறாப்பெருவாழ்வைப்
பொங்கிப்பாடு
மாவீரப்பண்பாடு அவர் நெறிபோற்றி நிதம்செய்க வழிபாடு
அதுவே தமிழரெம் மரபுவழிப்பண்பாடு
விளக்கேற்று ஒளிகூட்டு மலர்தூவு மணங்கூட்டு
உளமேற்று மாவீர உறுதிமொழி
ப்புதுப்பாட்டு-அது தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
அரியாத்தை
27.11.2024
