திலீபம்..திலீபம்..திலீபம்..திலீபம்..திலீபம்…திலீபம்..திலீபம்…தியாக தீபம்

0 0
Read Time:4 Minute, 4 Second

பல்லவி


யாகத் தீயில் தேகம் ஊற்றிச் சாவைச் சாய்த்தவன்
தமிழ் ஈழத்தாயின் மானம் போற்றி ஈகம் காத்தவன்

துரோகம் தன்னைக் கழுவிற்பூட்டி தூய்மை சேர்த்தவன்
பாரதச்சதியை மேடை ஏற்றி கீதை யார்த்தவன்

அகிம்சைப் போர்வீரனே புரட்சியின் பேர் திலீபனே
எழுவாய் எம்மீதிலே மலரும் தமிழீழமே

சரணம்1


கனவும் நினைவும் தமிழீழம்
நினைவும் அதுவே என்றாயே
கனவாய்ப் பல்கலைக்கழகத்தின்
கல்வியை உதறிச் சென்றாயே

இளமையிலே தெளிவானாய்
இலட்சியம் தாங்கிய புலியானாய்
உரிமைப்போரில் உறவானாய்
உண்மை வீரன் நீயானாய்

பெண்மை சூடிய திமிரில்
எழுச்சியை மூட்டியவன் நீயே
அண்ணன் தேடிய ஆற்றல்
திறனை தீட்டியவன் நீயே
சுதந்திரப் பறவைகளாக்கி
விடுதலை வானை அளந்திட வைத்தாயே

திலீபன் தாகம் தாகம் தீராதோ
யாகத் தீயே தீயே மூளாதோ
மனமே எண்ணி எண்ணித் துடிக்காதோ
மக்கள் புரட்சி புரட்சி வெடிக்காதோ…

சரணம்2


அமைதிப் படை யென வந்தவரின்
வேடம் கலைத்து நின்றாயே
தமிழ் இறைமை பறித்த அரசுகளை
விரதம் பூண்டு வென்றாயே

ஆயுள் கடந்தது தியாகமே
அலையென எழுந்தது தேசமே
போர்ப்பறை முழங்கிடப் பொங்கியே
புரட்சியில் கொதித்தது றஈழமே

கோழைத்தனமாய் இந்திய அரசு
கொலைவெறி ஆடியதேனண்ணா
மானம் பறித்தே தாய்க்குலம் மீதில்
ஈனம் புரிந்தது ஏனண்ணா
அகிம்சை நாடு முகமிழந்தது
அழியாக் கறையைத் தானுமிழ்ந்தது

திலீபன் தாகம் தாகம் தீராதோ
தியாகத் தீயே தீயே மூளாதோ
மனமே எண்ணி எண்ணித் துடிக்காதோ
மக்கள் புரட்சி புரட்சி வெடிக்காதோ…

ஆஆஆஆஆஆஆ……
ஆஆஆஆஆஆஆ…..

சரணம்3


தலைவன் வழியில் தழலாகி
மலையாய் எழுந்தது மாவீரம்
தமிழின அழிப்பே இலக்காக
உலகே இணைந்தது கொடும்பாவம்

இரத்தம் தோய்ந்தது தமிழீழம்
ஏனோ இந்தக் கலிகாலம்
முள்ளிவாய்க்கால் அவலம்வரை
இந்திய நாட்டின் சதிக்கோலம்

திலீபன் வேண்டிய கோரிக்கைகள்
இன்னும் தீர்த்திடக் கூடவில்லை
பெரும் துன்பியல் சம்பவத்தின்
பின்னும் இந்தியம் திருந்தவில்லை

இதுவே தொடர்ந்தால் எல்லை கடந்தால்
உறவுக்கு வழியோ ஏதுமில்லை

திலீபன் தாகம் தாகம் தீராதோ
தியாகத் தீயே தீயே மூளாதோ
மனமே எண்ணி எண்ணித் துடிக்காதோ
மக்கள் புரட்சி புரட்சி வெடிக்காதோ…

யாகத் தீயில் தேகம் ஊற்றிச் சாவைச் சாய்த்தவன்
தமிழ் ஈழத்தாயின் மானம் போற்றி
ஈகம் காத்தவன்
துரோகம் தன்னைக் கழுவில் ஊட்டி தூய்மை சேர்த்தவன்
பாரதச் சதியை மேடை ஏற்றி கீதை யார்த்தவன்

அகிம்சைப் போர்வீரனே புரட்சியின் பேர் திலீபனே
எழுவாய் எம்மீதிலே மலரும் தமிழீழமே

திலீபன் தாகம் தாகம் தீராதோ
தியாகத் தீயே தீயே மூளாதோ
மனமே எண்ணி எண்ணித் துடிக்காதோ
மக்கள் புரட்சி புரட்சி வெடிக்காதோ…

வரிகள்,இசை:
கி.மணிமொழி
பாடியோர்:
கி.மணிமொழி
க.வைஷ்ணவி
ஒலிப்பதிவு:
இசைப்பிரியன்
உருவாக்கம்,வெளியீடு:

அக்கினிப்பறவைகள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment