புதிய ஜனாதிபதி தெரிவின் பின்னர் அரியநேத்திரன் சார்பில் வெளியான அறிக்கை

0 0
Read Time:1 Minute, 46 Second

தமிழ் மக்களின் இறைமையையும் சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரித்தால்தான் இலங்கைத் தீவின் பல்லினச் சூழலைப் பாதுகாக்கலாம் என புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் பொதுச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு மட்டுமல்லாது, தமிழர் தாயகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு களமிறக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு கிடைத்த ஆதரவு, அந்தப் பணியில் தொடர்ந்து முன்னோக்கிச் செலுத்தும் ஊக்க சக்தியாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பொதுச்சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, தேர்தல் நடவடிக்கைளின் போது தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக செயற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபை நன்றிகளை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment