சௌத்தென்ட் மாநகரில் ‘தூவானம்’

0 0
Read Time:2 Minute, 29 Second

தாயக நிறுவனமான நித்திலம் கலையகத்தின் உருவாக்கத்தில் தமிழி யின் ஆதரவுடன் சௌத்தென்ட் நகரில் சிறப்புக் காட்சியாக ‘தூவானம்’.
திரையிடப்படுகிறது.

எமது மக்களுக்கான சிந்திக்கத் தூண்டும் அறைகூவலாக, எமது அழகிய வாழ்வியலை உலகுக்கு முன் கொண்டுவருவதாக ‘தூவானம்’ அமைகிறது.

புலம்பெயர்ந்து வாழும் எமது எதிர்கால சந்ததியின் வாழ்வியல் நோக்குகள் பற்றிய சிறந்த வழிகாட்டலாக அமைந்துள்ள இத்திரைப்படமானது, அனைத்து தமிழ் உறவுகளினதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தாயகத்தில் எம் மக்களோடு தொடர்ந்தும் மருத்துவப் பணியில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் Dr. சிவன்சுதன் அவர்களின் தயாரிப்பில், திரு. ரதிதரன் அவர்களின் இயக்கத்தில் உருவாக்கம் பெற்றுள்ள இப்படைப்பானது, உலகெங்கும் வாழும் எம் ஈழத்தமிழர்களின் தாய்மண் மீதான பற்றுதலையும், உணர்வுகளையும் பிரதிபலக்கும் அரும் படைப்பாக அமைந்துள்ளது. ஆகவே ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் பார்க்கவேண்டிய இத்திரைப்படம் நீங்கள் வசிக்கும் சௌத்தென்ட மாநகரில் உங்கள் அனைவரதும் நல்லாதரவை வேண்டிநிற்கின்றது. நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட எம் தாயக் கலைஞர்களின் பெருமுயற்சியை ஊக்குவித்து, கரங்கொடுக்கும் அதேவேளை, எம் எதிர்கால சந்ததியினர்க்கும் வழிகாட்டி நிற்போம்.

ஈழத்தமிழர்கள் அனைவரும் குடும்பமாக வந்து காணவேண்டிய ஈழத்திரைப்படம்.

காணத் தவறாதீர்கள்!

இடம்:
Lower Hall – Donald Fraser Hall
Leigh Community Centre
71-73 Elm Rd,
Leigh-on-Sea,
Southend-on-Sea,
SS9 1SP

காலம்:
30/06/2023 மாலை 18:00 மணி

தங்கள் பேராதரவை வேண்டி நிற்கும்,
நித்திலம் கலையகம்,
தமிழி-தமிழ் ஒன்றியம்

தொடர்புகளுக்கு:
Dr. வாமன் 07413 767716
திரு. வாணன் 07897646664
TAMIL I
office.tamili@gmail.com

நன்றி!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment