லெப்.கேணல் அன்பு (அம்மா) 25ம் ஆண்டு வீரவணக்க நாள்

0 0
Read Time:6 Minute, 36 Second

முல்லை மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் 10.06.1998 அன்று சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் அன்பு / அம்மா அவர்களின் வீரப்பிறப்பும் வீரவரலாறும்…..

வீரம் விளையும் தமிழீழ மண்ணில் திருநெல்வேலி நகரிலே வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் ஆறாவது புதல்வனாக 1965.09.03ம் நாளன்று அம்மா என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் திருக்கேதீஸ்வரன் வீரப்பிறப்பெடுத்தான். இவனை வீட்டாரும் உற்றாரும் “ரவி” என்று செல்லமாக அழைப்பார்கள், தனது ஆரம்ப கல்வியை திருநெல்வேலியில் அமைந்திருந்த பரமேஸ்வராக் கல்லூரியில் உயர் கல்வியை யாழ். மத்திய கல்லூரியிலும் கற்றான். இவன் சிறந்த பண்பாளனாகவும் பணியாளனாகவும் விளங்கினான். கல்லூரியின் சாரணர் இயக்கமும் இவனை நெறிப்படுத்தியது. அத்துடன் இவன் ஒரு பல் தொழினுட்ப வல்லுனனாகவும் விளங்கினான்.

1986ம் ஆண்டளவில் ஈழ விழுதளைப் பணிகளில் ஈடுபட்டு 1986ம் ஆண்டு தனது இருபத்தோராவது வயதிலே தன்னை முழுமையாகப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டான். தமிழீழத்தில் சாவகச்சேரியில் நடைபெற்ற முதலாவது பயிற்சிப் பாசறையில் தனது போர்ப்பயிற்சியினை முடித்துக் கொண்ட இவன் அவ்வாண்டிலேயே தேசியத் தலைவரையும் சந்தித்தான்.

போராட்ட ஆரம்ப காலங்களில் நாவற்ற்குழிப் பகுதியில் சிறிலங்கா இராவுவத்தினருடனான மோதல்களில் பங்காற்றியதுடன், உணவு வழங்கலிலும், போர் ஆளணி ஒழுங்குபடுத்துவதிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டான். பின்னர் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலத்தில் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற தாக்குதல்களிலும் கலந்து கொண்டான். அக்காலப்பகுதியில் தமிழ்ச்செல்வன் அண்ணையுடன் இவனும் சக போராளிகளும் இணைந்து யாழ்ப்பணத்தில் இருந்த எம்மக்களையும் போராளிகளையும் வன்னியில் இருந் எமது தேசியத் தலைவருடன் இணைக்கும் தொடர்புப்பாலமாய் செயற்பட்டார்கள். இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கு இச் செயற்பாடுகள் ஒரு காரணமுமாய் அமைந்திருந்தது. இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்த வேளையில் பலாலி இராணுவத் தளத்தில் முன்னணிப் போர் நிலைகளுள் ஒன்றான “வண் வ்ண்” நிலையில் நின்று சிறப்பாக பணியாற்றினான்.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்தினாவால் தீபாவளி நாளன்று தொடக்கி வைக்கப்பட்ட பலாலி இராணுவத்தின் ஆக்கிரமிப்பான “ஒப்பரேசன் ஜெயசக்தி” நடவடிக்கைக்கு எதிரான போரில் தீவிரமாகப் போராடி காலில் விழுப்புண் அடைந்தான். பின்னர் யாழ் மாவட்டத் துணைத் தளபதியாகவும் ஆவண ஆயுதக் காப்புப் பணிகளிலும் பொறுப்பாகச் செயற்பட்டான். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத் தளபதியாக அம்மா விளங்கினான். அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்ட வேளையில் இவன் அதிகாரிகள் பயிற்சியும் பெற்றிருந்தான் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் நடந்த பல சமர்களில் துணிச்சலுடன் பங்காற்றி வெற்றிகள் பலவற்றை விடுதலைப் புலிகளுக்குப் பெற்றுத் தந்தான். பலாலி கிழக்குப் புறமான காவலரண்கள் மீதான தாக்குதலில் சிறப்பாக பங்காற்றி கையில் விழுப்புண் அடைந்தான் இத்தாக்குதலில் தனது உற்ற நண்பர்களான மேஜர் டொச்சனையும் கப்டன் வீமனையும் சக போராளிகள் சிலரையும் இழந்தான்.

1994ம் ஆண்டில் வழங்கல் பகுதிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். வன்னி மண்ணில் குறிப்பாக முல்லைப் படைத்தள வெற்றி தொடக்கம் ஜயசிக்குறூய் (ஜெயசிக்குறூய்) ஓராண்டு வெற்றி விழா நாளிற்கும் மேலாக வழங்கல் பணி இவனால் திறமையாக மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு வழங்கல் பகுதி போராளிகளும் பணியாளர்களும் தமது கடின உழைப்பினை வழங்கியிருந்தனர். இதற்கான பாராட்டினை தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்றிருந்தான் அதுமட்டுமன்றி தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இறுதிவரை செயற்பட்டு வந்தமை குறிபிடத்தக்கது.

தனது இதயத்தின் ஒகு மூலையில் தன்னை நேசித்தருக்கு இடம் கொடுத்திருந்த அம்மா என்ற பெரு வீரனின் இருதிவீர வரலாற்று வரிகள் அவனது உதிரத்தால் வழங்கலின் மையத்தில் 1998.06.10ம் நாளன்று எழுதப்பட்டத்து.

நினைவுபகிர்வு:- வே. கடலரசன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதித்துறை,தமிழீழம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment