வன்னி,யாழ் நிலப்பரப்பில் அவளுடைய தடம் பதியாத இடமே இல்லை. களமுனைகளில் சாதனைகளின் நாயகியாக வலம் வந்தவள். பயம் என்பதை அறியாதவள் . வீரம் என்பது அவளோடு கூட பிறந்தது. பல வீர தழும்புகளை தனது உடலில் சுமந்து நடந்தவள்.அனைவராலும் பிரமித்துப் பார்க்கக் கூடிய ஓர் புரட்சி பெண் இவள்.
இனையத்தில் இவள் பெயரிட்டால் வரும் இவள் சாதனப்பட்டியல். இவள் சாதனைகளை தமிழினமே பார்த்து வியந்தது அன்று . இன்று அவள்தான் இவள் என்பது யாருக்கும்மே தெரியாமல் போனதுதான் மிகவும் வேதனை????
புற்று நோயால் பாதிக்கப்பட்டு, பல மாதக்கணக்காக வேதனையால் அவஸ்தைப்பட்டு ,இன்று இந்த உலகை விட்டு சென்று விட்டாள்.இவளுடைய மரணம் எம்மை மௌனமாக அழ வைக்கிறது .உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு சாதித்த இவள், இன்று வரை யாரையும் தொடர்பு கொண்டு தன் நிலைபற்றிக்கூறாது எந்த உதவியும் யாரிடமும் பெறாது அவளுக்கு வந்த அந்தப் பொல்லாத நோயோடு தன்னால் இயன்றவரை போராடி மரணத்தை எய்து விட்டாள் .
உயிரை கூட கொடுக்கக்கூடிய தோழிகள் பலர் இருந்தும் யாரிடமும் எதுவும் பேசாமல், எந்த உதவியும் கோராமல், அவள் மௌனமாக தனக்குள்ளேயே அழுது ,தனக்குள்ளே துடிதுடித்து எம்மை விட்டு பிரிந்து விட்டாள்.
அவளுடைய இழப்பை தாங்க முடியாமல் மனம் விம்மி தவிக்கிறது. அவளைத் தெரிந்தவர்களுக்கு தான் தெரியும் அவளுடைய சேவை எவ்வளவு மகத்தானதாக இருந்தது என்று. எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்து மிகப்பெரும் சாதனை படைத்த எம் தோழி எம்மையெல்லாம் விட்டு பிரிந்ததை தாங்க முடியாமல் நாம் இன்று தவித்து நிக்கின்றோம்.
எங்கள் “முல்லை அக்கா” உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று, எம் மாவீரர்களிடம் வேண்டுவதோடு, உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் இழப்பை தாங்கும் சக்தி கிடைக்க வேண்டுமென பிரார்த்தனை செய்கின்றோம்.🙏🙏😢💐
கலைவிழி