கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும், தமிழீழமே தீர்வு எனவும் முக்கிய அரசியல் மையங்களில் வலியுறுத்தியபடி 7 நாடுகளை கடந்து ஐ.நா முன்றலை 1500Km பயணித்து இன்று 06/03/2022 எழுச்சிகரமாக வந்தடைந்தது.
மனித நேய ஈருருளிப்பயண போராளிகளால் ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளிகள் முருகதாசன், செந்தில்குமரன் அண்ணாக்களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.





நாளை 07/03/2022 பி.ப 2 மணியளவில் ஐ.நா முன்றலில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் வந்து உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்றுமாறு வேண்டுகிறோம்.





« நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது »
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.