சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்!

0 0
Read Time:3 Minute, 39 Second

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 10.10.2021 ஞாயிறு அன்று சூரிச் மாநிலத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

முதற்பெண் மாவீரர்; 2ம் லெப் மாலதி உட்பட ஐந்து மாவீரர்கள், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப்; கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் களப்பலியான மாவீரர் லெப். பரமதேவா அவர்களினதும், விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர் லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர், கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ, சிறிலங்கா அரசின் சதியால் படுகொலை செய்யப்பட்ட லெப். கேணல் நாதன், கப்டன் கஜன், ஆகியோரின் நினைவுகள் சுமந்த இவ்வெழுச்சி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும் காணிக்கையாக்கப்பட்டன.

கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடருக்கு மத்தியிலும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடைமுறைகளைப்பேணி இவ்வெழுச்சி நிகழ்வில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இவ் வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், கவிவணக்கம், பேச்சு, எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன.

தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக வீரப்பெண்ணாக விடுதலைக்காய் வீறு கொண்டெழுந்து வித்தாகி வீழ்ந்த 2ம் லெப் மாலதி அவர்களின் நினைவு நாளானது தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவுகூரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு தமிழீழத் தேசியக்கொடி கையேந்தலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment