12 வருட காலமாக சர்வதேசத்தின் மட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசு தான் மேற்கொண்ட தமிழின அழிப்பில் இருந்து தன்னை பாதுகாத்து நியாயப் படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் தமது வாழிட நாடுகளில் தொடர் அறவழிப்போராட்டங்களை அயராது தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி நடத்திக்கொண்டு கொண்டு இருக்கின்றார்கள்.


அந்த வகையிலே கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருறுளிப்பயணம் நெதர்லாந்து, பெல்சியம் , லுக்சாம்பூர்க், யேர்மனி நாடுகளை கடந்து முக்கிய அரசியற் சந்திப்புக்களின் ஊடாக பிரான்சு நாட்டினை 795Km கடந்து வந்தடைந்தது.


குறிப்பாக பல மாநகர சபை மற்றும் ஊடகங்கள், பல்லின வாழ் மக்கள் , ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள்… மத்தியிலும் சிங்களப் பேரினவாத அரசின் கொடூரத்தனத்தினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தமிழின அழிப்பு பற்றியும் தமிழர்களின் நியாயமான தீர்வாக சுதந்திரமான தமிழீழமே அமையும் என்பதனையும் எடுத்துரைத்த படியே பயணம் எதிர்வரும் 13/09/2021 பிரான்சு நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி நகர்கின்றது. மேலும் பயணம் ஐக்கிய நாடுகள் அவை நோக்கி தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.



“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது”
– தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.