முல்லைத்தீவில் “முல்லை” என்னும் பால் உற்பத்தி நிறுவனம் ஒன்டு இயங்கிவருகின்றது.
தரமான பசுப்பால் பைக்கட் மற்றும் பசுப்பாலில இருந்து தயாரிக்கிற தயிர், நெய், பன்னீர், யோகட், பால் யூஸ், யோகட் பால், பால் ; ரொபி, சொக்கலேட்
போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றார்கள். பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யக் கூடிய அளவில அதிகமான பாலை உற்பத்தி செய்கின்றார்கள்.
ஆனாலும் பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுற இந்த காலத்தில கூட பாலை வாங்கி குடிக்கிற மக்கள் குறைவாகத்தான் இருக்கின்றார்கள். அதனால பாலில இருந்து பலவித உணவுகள் தயாரிக்கிற பல்வேறு நிறுவனங்களுக்கு தங்கள் பாலை முல்லை நிறுவனம் விற்பனை செய்யவேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
எங்கட மண்ணில இருந்து முல்லை நிறுவனம் உற்பத்தி செயும்
தரமானதும் தூய்மையானதுமான பாலை நாங்கள் உதாசீனம் செய்கின்றோம். இதபோல
நாங்கள் உதாசீனம் செய்யும் எத்தினயோ உள்ளூர் உற்பத்திகளைப் பெற்று வெவ்வேறு
தயாரிப்புகளால சர்வதேச நாடுகள் கொள்ளை இலாபம் ஈட்டிக்கொள்ளுகின்றார்கள்
இதனால நாங்கள் சிறந்த நுகர்வுப் பொருள் கலாசாரத்தை இழந்து வரும் அவல நிலையில இருக்கிறம்.
முல்லை நிறுவனத்தின் காணொளி கீழே👇👇
