1987 செப்டம்பர் 14 ஆம் நாள் காலை அன்று காலை தமிழீழத்தில் தியாக தீபம்..

‘மன்மதன் இல்லம்’ என அழைக்கப்பட்ட தலைவரின் அலுவலக வளாகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தீலீபனும், அவரோடு 90 க்குப் பின்னர் சில வருடங்கள் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட ராஜனும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்தார்கள்.1987ஆகஸ்ட் 15 ஆம் நாள் தமிழ் நாட்டில் இருந்து இந்திய விமானத்தில் சென்று இறங்கிய காசி அண்ணாவும் நானும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தோம். தலைவர் அவர்களது அலுவலகப் பணிகள் எம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தன. திலீபனின் வருகையை தலைவருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து திலீபன் உள்ளே அழைக்கப்பட்டார். காசியண்ணா மற்றும் எங்களோடு ராஜன் பேசிக் கொண்டிருந்தார்.

மேலும்