சுவிசில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2025!

0 0
Read Time:2 Minute, 28 Second

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 37ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாளினை நினைவுகூர்ந்து நடாத்தப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டியானது 25.05.2025 ஞாயிறு அன்று வோ மாநிலத்தில் கழகங்கள் ஆதரவாளர்களின் பங்களிப்போடு சிறப்பாக நடைபெற்றது.


தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ்கிளையினால் நடாத்தப்பட்ட போட்டியானது பொதுச்சுடரேற்றல், தேசியக்கொடியேற்றல்இ ஈகச்சுடரேற்றல், அகவணக்கத்துடன் ஆரம்பமானது. எதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த்தேசிய உணர்வைப் பேணவும், மாவீரர்களின் வீரவரலாறுகள், தியாகங்களைப் பாதுகாத்து கடத்தவும், தாயகம் நோக்கிய தேடலை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இப் போட்டியில்; உதைபந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம் ,கரப்பந்தாட்ட போட்டிகலுடன் சிறுவர்களுக்கான சுவட்டுமைதான மெய்வல்லுனர்ப் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றன. அனைத்துப்போட்டிகளிலும் வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர்
வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டு, தாரக மந்திரத்துடன் போட்டிகள் நிறைவடைந்தன.

தமிழீழ விளையாட்டுத்துறை
சுவிஸ்கிளை
28.05.2025

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment