வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 16ம் ஆண்டு நினைவு நாள்

தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 16ம் ஆண்டுவீரவணக்கம் சிங்கள தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் ‘தாக்குதலுக்கு முன்னதாக’உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்.

மேலும்

உழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப்.கேணல் தவம்

மிகவும் அண்மைக்காலத்தில் எம்மை விட்டு நீண்டதூரம் போய்விட்ட எங்கள் அன்பு அண்ணன் லெப்.கேணல் தவம். தவா பற்றிய நினைவுக் குறிப்பை எரிமலையில் எழுதுவதற்காகப் பலரிடம் தகவல் திரட்டச் சென்றிருந்தேன் எமது அமைப்பில் நீண்டகாலம் பணியாற்றிய நிதர்சனத்தின் மதிப்புமிக்க முத்துக்களில் ஒருவரான அவரைப்பற்றித் தேடிச்சென்றபோதுதான் அவர் வெறும் முத்தல்ல ஏராளமான முத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு பெருங்கடல் என்பது புரியவந்தது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 2025

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம். காலம்:03.03.2025, திங்கட்கிழமை,நேரம்: 14:00 – 18:00இடம்: UNO – Geneva ஜெனீவா முருகதாசன் திடல்..

மேலும்

லெப்.கேணல் பொன்னம்மானின் 38வது ஆண்டு நினைவு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல் பொன்னம்மான். 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் தைடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 11போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

மேலும்

நாட்டுப் பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி 16ம் ஆண்டு வீரவணக்கம்

ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி .

மேலும்

ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார்.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காவின் துணை இராணுவக் குழுக்களின் தாக்குதலில் வீரச்சாவடைந்த மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப். வுpதிமாறன்,, மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் இருபதாம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 07.02.2025 வெள்ளி அன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில் நினைவுகூரப்பட்டது.

மேலும்

லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மீள்கட்டுமான பணிகள் மேற்கொண்டவேளை 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப்.விதிமாறன் ஆகிய போராளிகளின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்