அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.
மேலும்Year: 2024
‘இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது’: அனுரகுமார திஸாநாயக்க கருத்து
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்”இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்…!
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத் தொடங்கியிருந்தார்கள்.
மேலும்தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்:திலீபனுடன் ஏழாம் நாள்
தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்:திலீபனுடன் ஆறாம் நாள்
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.
மேலும்கடலளந்த காவியப்புலிகரும்புலி லெப்ரினன்ட் கேணல் நளாயினி
நிமிர்ந்த நடைகொண்டாய்நெஞ்கத்தே அஞ்சாமைத்திமிர்கொண்டாய்அண்ணனின் ஆணையே மறையென்றாங்கேதிண்ணமாய் செயற்றிறன் செப்பினாய்பயிற்சியை நான்காம் அணியில் வியக்கும் வகையில் முடித்ததுகூட பெரிதல்ல.இந்தப்பாசறை அடைந்திட நீ பட்டபாடு பெருங்கதையே……
மேலும்தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: இன்று 5ம் நாள்…
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து “திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்” என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.”
மேலும்தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு – 2024
ஐ.நா முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!
மேலும்திலீபனுடன் நான்காம் நாள்…!
கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.
மேலும்