நடுகல் வழிபாடு 2024 சுவிஸ்

0 0
Read Time:2 Minute, 19 Second

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து, மாவீரர் வாரத்தின் தொடக்க நாளன்று சுவிஸ் நாட்டில் மாவீரர் நினைவுக்கல் அமைந்துள்ள லவுசான் மாநிலத்தின் இவர்டோன் நகரில் நடுகல் வழிபாடு

சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நடுகல் வழிபாடு தமிழீழ விடுதலைக்காகவும், தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் வகையில் 21.11.2024 வியாழன் மாலை 18.15 மணியளவில் சுவிஸ் நாட்டின் லவுசான் மாநிலத்தின் இவர்டோன் நகரில் அமைக்கப்பெற்றுள்ள மாவீரர் நினைவுக்கல்லுக்கான நடுகல் வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் உறவுகளும் உணர்வாளர்களும் மாவீரர் கலந்துகொண்டிருந்தனர்.

1990 நவம்பர் 21 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழத் தேசியக்கொடி அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகிய இன்று தமிழீழத் தேசியக்கொடிகளுடன் மாவீரர்களை நெஞ்சிலிருத்தி நடுகல் வழிபாடு செய்யப்பட்டது.

இவ்வாண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாளானது எதிர்வரும் நவம்பர் 27 அன்று 12.30 மணிக்கு பாசல் மாநிலத்தின் மிகப்பிரமாண்ட அரங்காகிய Messe Nordல் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. மானமாவீரருக்கு வணக்கம் செலுத்தி, உறுதி எடுக்க தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் அணிதிரண்டு வருகை தருமாறு உரிமையோடு அழைக்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழீழத் தேசிய மாவீரர் பணிமனை சுவிஸ் கிளை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment