தியாகதீபம் அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 30.04.2023 – சுவிஸ்

தியாகதீபம்  அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 30.04.2023 – சுவிஸ் 

மேலும்

மகளிர் தினம் கொண்டாடாதவள்

காலை ஐந்து மணிக்கு அலாரம் வைக்காமலே எழுந்துவீடு பெருக்கிநீர் தெளித்துக்கோலமிட்டுபாத்திரம் விளக்கிவீட்டில் அனைவருக்கும்காபி போட்டுக் கொடுத்துகாலை உணவைத் தயாரித்துமீண்டும் பாத்திரம் விளக்கிகல்லூரிக்குச் செல்லும் மகனுக்கும்பள்ளிக்குச் செல்லும் மகளுக்கும்டிபன் பாக்ஸ் கட்டி மறக்காமல் கொடுத்துனுப்பி எல்லோரும் புறப்பட்டதும் வியர்வை வழிய மின்விசிறியின் கீழ் அமரும்போது ஞாபகம் வரும்துணி ஊற வைக்கலாமே என்று.

மேலும்

ஐ.நா முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற
கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!!

சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதின்நான்காவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்கா அரசபயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் குளிர்காலநிலைக்கு மத்தியிலும் கலந்துகொண்டிருந்தனர்.06.03.2023 திங்கள் அன்று பிற்பகல் 14:15 மணியளவில் ஆரம்பமான இக் கவனயீர்ப்பு நிகழ்வில் சுமார் ஒருமணிநேரமாக தமிழ் உறவுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு உரத்தகுரலில் தமது உரிமைக்குரல்களை ஒலித்ததோடு மட்டுமன்றி தாங்கிய பதாதைகள் மூலம் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்புசார்ந்த வெளிப்பாடுகளை எடுத்துரைத்த வண்ணமிருந்தனர்.

மேலும்

மனித நேய ஈருருளிப்பயணம் ஐக்கிய நாடுகள் அவையை வந்நதடைந்தது.

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐக்கிய நாடுகள் அவையை வந்நதடைந்தது. நாளை திங்கட் கிழமை 06/03/2023 நடைபெறும் கவனயீர்பு போராட்டத்திற்கு அறைகூவல்!

மேலும்

லெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அண்ணா அவர்களின் 35ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

பிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 12 ஆவது ஆண்டு முதல் மூன்று நாள் நிகழ்வுகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 12 ஆவது ஆண்டாக வன்னிமயில் – 2023 தேச விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டி முதல் நாள் நிகழ்வுகள் கடந்த 25 ஆம் (சனி), 26 ஆம் (ஞாயிறு), மற்றும் 27 ஆம் (திங்கள்) நாள்களில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான புளோமெனில் பகுதியில் மிகவும் சிறப்பெழுச்சியாக இடம்பெற்றன. மூன்று நாட்களும் ஆரம்ப நிகழ்வாக மாவீரர் திரு உருவப்படத்திற்கு மாவீரர் குடும்பத்தவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.

மேலும்

13 நாளாக (01/03/2023) தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது.

கடந்த 17/02/2023 பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்தின் முன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம் நெதர்லாந்தில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் சந்திப்புக்களை மேற்கொண்டு எமது கோரிக்கை அடங்கிய மனுக்களைக் கையளித்திருந்தது. சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ தனி அரசே நிரந்தர தீர்வு என்பதனையும் கோரிக்கைகளாக முன்னிறுத்தியவாறு தொடருகின்ற இப்போராட்டம் பிரித்தானியா, நெதர்லாந்து,பெல்சியம், லக்சாம்பூர்க் , யேர்மனி , பிரான்சு ஆகிய நாடுகளில் பல முக்கிய அரசியற் சந்திப்புக்களை நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும்

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது!

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும்

11 நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை அண்மிக்கின்றது.

இன்று 27/02/2023 காலை எர்ச்தைன் நகரசபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த மனிதநேய அறவழிப் போராட்டம் பிரான்சுக் காவல் துறையின் வழிகாட்டலுடன் ஏர்செய்ன், பேன்பெட், கொல்மார் போன்ற மாநகரசபைகளிலும் முக்கிய அரசியற் சந்திப்புக்கள் மேற்கொண்டு தொடர்ந்து முலூசு மாநகரை நோக்கி பயணிக்கிறது.

மேலும்

திரு.அன்ரன் பிலிப் சின்னராசா அவர்கள் காலமானார் !

இவர் 1983 யூலை 25, 27 ஆம் தேதிகளில் நடைபெற்ற வெலிக்கடை சிறைப் படுகொலைகளிலிருந்து தப்பியவர். இறுதிப் போரின்போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் மன்ற விசாரணைகளுக்குத் தேவையான ஆவணத் தொகுப்பு விடயங்களில் திரு.பிலிப் சின்னராசா அவர்கள் அண்மைக்காலங்களில் செயற்பட்டு வந்துள்ளார்.

மேலும்