அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01, 02, 05, 06, 07, 08, 09, 10 ஆகிய திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள நாட்டியமயில், நெருப்பின் சலங்கை – 2023 நிகழ்விற்குஅனைவரையும் அழைக்கும் முகமாக உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாகவும் பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் உறவினர்களிற்கும் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும்Month: February 2023
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்..
பிரான்சில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (22.01.2023) ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.
மேலும்பிரான்சில் இடம்பெற்ற தாயக விடுதலைக்கு உரமூட்டிய பாடகி வாணி ஜெயராம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!
தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்து உரமூட்டிய பாடகி வாணி ஜெயராம் அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு நேற்று (12.02.2023) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு திரான்சி நகரில் இடம்பெற்றது.
மேலும்சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட
ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சிநாள்!
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பபட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 12.02.2023 அன்று மாலை 18:00 மணியளவில் அவர் ஈகைச்சாவினைத் தழுவிய ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நினைவுகூரப்பட்டது.
மேலும்ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார்.
மேலும்பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-நடாத்தும் இரண்டாவது பட்டமளிப்பு விழா!
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடனும் , தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனும் இணைந்து நடாத்தும் இரண்டாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19/02/2023 அன்று நடைபெறவுள்ளது.
மேலும்நாட்டுப்பற்றாளர் /ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்திஅவர்களின் 14 ஆண்டு நினைவு நாள்
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட நாள் 12-02-2009.தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.
மேலும்சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன்
உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு
அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!
07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவெழுச்சி நாளானது 07.02.2023 செவ்வாய் அன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் அமைந்துள்ள கௌசல்யன் கலைக்கூடத்தில் நினைவுகூரப்பட்டது.
மேலும்பிரான்சில் தாயக விடுதலைப் பாடகியின் கண்ணீர் வணக்க நிகழ்வு!
தாயகப் பாடல்களால் விடுதலைக்கு உணர்வூட்டி தேனென ஒலித்த கானக்குயில் ஒன்று ஓய்ந்து போனது. தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்து உரமூட்டிய பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வதுவயதில் காலமானார்.
மேலும்வடக்கிலிருந்து கிழக்கை நோக்கிய எழுச்சிப் பேரணி
மடக்களப்பு பிரகடனம் 07 பெப்ரவரி 2023
இன்று 2023 பெப்ரவரி 7 ம் திகதி, தமிழ் மாணவர்களும் மக்கள் சமூக அமைப்புக்களும்,தமிழ் மக்களுமாக ஒன்றிணைந்து ஈழத் தமிழராகிய நாம் மரபுவழித் தாயகம், தேசியம்,தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்குப்பிரகடனப்படுத்துகின்றோம். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ்பிரகடனம் எனபவற்றினூடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாகப் பலமுறைவெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியநிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக, மீண்டும் ஒருதடவை எமது ஏகோபித்தவெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இன்றுபேரெழுச்சியாக எமது தாயகத்தின் தென் பகுதியாகிய மட்டக்களப்பு நகரில்ஒன்றுதிரண்டுள்ளோம். தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்பட முன்,தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்மக்களின் பாரம்பரியத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் கூட்டாகப் பேரெழுச்சி கொண்டுள்ளனர்.
மேலும்