பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-நடாத்தும் இரண்டாவது பட்டமளிப்பு விழா!

0 0
Read Time:1 Minute, 49 Second

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடனும் , தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனும் இணைந்து நடாத்தும் இரண்டாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19/02/2023 அன்று நடைபெறவுள்ளது.

இந்த இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் 32 பட்டகர்கள் பட்டம் பெறவுள்ளனர். இவர்களுடன் ஏற்கனவே பட்டம் பெற்ற பட்டகர்களும் இந்நிகழ்வில் சிறப்பாக மதிப்பளிக்கப்படவுள்ளனர். மேலும், பட்டயம் ,மேற்பட்டயம் , மேற்சான்றிதழ்நிலை மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

அன்றைய நிகழ்வின் இரண்டாவது அமர்வாக 2020,2021,2022 ஆகிய ஆண்டுகளில் வளர்தமிழ் 12 ஐ நிறைவு செய்த 450 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் சான்றிதழ் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்படவுள்ளனர்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது வெள்ளிவிழாவை காணும் இவ்வாண்டில் இரண்டாவது இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழாவுடன் வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்கள் மதிப்பளிக்கப்படுவது வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது.

பண்டைத் தமிழரின்இயற்கையோடு இணைந்த வாழ்வியலைக் குறிக்கும் முகமாக இந்த இரண்டாவது பட்டமளிப்பு விழா இயற்கைசார் நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிட்டுக் கூறக்கூடிய விளத்தமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment