உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார்.
மேலும்Day: February 12, 2023
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-நடாத்தும் இரண்டாவது பட்டமளிப்பு விழா!
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடனும் , தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனும் இணைந்து நடாத்தும் இரண்டாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19/02/2023 அன்று நடைபெறவுள்ளது.
மேலும்நாட்டுப்பற்றாளர் /ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்திஅவர்களின் 14 ஆண்டு நினைவு நாள்
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட நாள் 12-02-2009.தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.
மேலும்